

உலகின் மிகச் சிக்கலான, மர்மமான சூழல்களில் ஒன்று சுந்தரவனத்தின் அலையாத்திக் காடு. அங்கே வாழும் உயிர்கள், அவற்றுடன் வாழ்நாள் போராட்டம் நடத்தும் மனிதர்கள் என இருதரப்புக்குமே இது கடினமான சவாலாக உள்ளது. பரப்பளவில் உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடாக இருந்தாலும், இக்காட்டின் சேற்றுநில உவர்மண் தாவரஉண்ணிகளுக்குத் தேவையான தாவர வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.
இதன் விளைவாக, இங்கு தாவரஉண்ணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு - இது சுந்தரவனப் புலிகளின் உயிர்வாழ்வுக்கான முக்கியச் சவாலாக மாறியுள்ளது. இப்பகுதியின் புலிகள் தங்களின் உணவுச் சங்கிலியை மாற்றிக்கொண்டு வருகின்றன. வழக்கமான இரையைப் பெற முடியாத சூழ்நிலையில், நண்டுகள், மீன்கள், சிறு நீர்வாழ் உயிரினங்களும் புலிகளின் உணவுப் பட்டியலில் இடம்பெறுகின்றன. இது புலிகளின் இயல்பான வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றம்.
புலியின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள்