சிறிய குருவியும் பெரிய நினைவுகளும்

சிறிய குருவியும் பெரிய நினைவுகளும்
Updated on
2 min read

ஆசானபூதூர் - திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமைதியான ஒரு குக்கிராமம். இன்றும் நவீனத் தொலைத்தொடர்பு வசதிகள் எட்டிப்பார்க்காத அந்த ஊரில், கைபேசியில் பேசுவதுகூட சவாலானதுதான்.

ஆனால், அந்தத் தொழில்நுட்ப இடைவெளியை இயற்கை இங்கே மிக அழகாக நிரப்பியிருக்கிறது. அத்தகைய சூழலில் அமைந்த ஒரு சிறிய வீட்டின் தாழ்வாரத்தில்தான் அந்தச் சிட்டுக்குருவி தன் வாழ்வைத் தொடங்கியது.

அந்த வீட்டில் ஒரு தம்பதியும் அவர்களின் இரண்டு மகன்களும் வசித்துவருகின்றனர். மூத்தவர் கல்லூரி மாணவர், இளையவனோ நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன்.

குடும்பத் தலைவர் வேலைக்கும், மூத்த மகன் கல்லூரிக்கும் சென்றுவிட, அந்த வீட்டின் பகல் பொழுதுகள் தாய்க்கும் அந்தச் சிறுவனுக்கும் மட்டுமே சொந்தமானவை. அந்த நிசப்தமான நேரத்தில்தான், அந்தச் சிட்டுக்குருவி அடிக்கடி வீட்டுக்குள் உலா வரத் தொடங்கியது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in