பறவைகளின் குவாண்டம் காந்தமானி | இயற்கையில் அறிவியல் 24

பறவைகளின் குவாண்டம் காந்தமானி | இயற்கையில் அறிவியல் 24
Updated on
2 min read

இயற்கை தன்னுள் பல்வேறு ஆச்சரியங்களைப் பொதிந்து வைத்திருக்கிறது. அந்த ஆச்சரிய முடிச்சுகளை ஒவ்வொன்றாக அறிவியல் அவிழ்த்துவருகிறது. அந்த வகையில் ஓர் ஆச்சரியம் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்குப் பறவைகள் வலசை செல்லுதல் (Migration). ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு குளிர் நாடுகளிலிருந்து வேடந்தாங்கல், கூந்தன்குளம், கோடியக்கரை, பழவேற்காடு உள்ளிட்ட தமிழகப் பகுதிகளுக்குப் பறவைகள் வலசை வருகின்றன.

கனடாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குப் பெருங்கடல்களைத் தாண்டி, சில கண்டங்களைத் தாண்டி, பல்வேறு நாடுகளைத் தாண்டிப் பறவைகள் வலசை செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், முந்தைய ஆண்டு எந்த இடத்துக்குச் சென்றனவோ, அதே இடத்தில் அடுத்த ஆண்டும் போய்த் தங்குமளவுக்குப்

பறவைகள் துல்லியமாகக் கணக்கிட்டுச் செல்கின்றன. பறவைகள் எவ்வாறு பல்லாயிரம் கி.மீ. வழி மாறாமல் வலசை செல்கின்றன என்பதைப் பற்றிப் பல காலமாகவே ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.

முன்னர் சொன்ன காரணங்கள்

ஆண்டின் வெவ்வேறு காலங்களில் சூரியன் வானில் இருக்கும் திசையைக் கொண்டு, தான் செல்லும் திசையைப் பறவை தீர்மானிக்கிறது என்பது ஒரு காரணம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள்படி வலசை போகும் பறவைகள் பெரும்பாலான பயண தூரத்தை இரவில்தான் கடக்கின்றன. எனவே, சூரியன் மட்டுமே முழுமையான காரணமாக இருக்க முடியாது.

இரண்டாவது காரணம், பறவைகளின் அலகின் உள்பகுதியில் உள்ள மேக்னடைட் என்னும் காந்தப்படிகங்கள் புவிக் காந்தப்புலத்தோடு இடைவினை புரிந்து அதன் மூலம் தான் செல்லும் திசையைத் தீர்மானிக்கின்றன. ஆனால் பறவைகளின் வலசைபோகும் தன்மை புவியின் வடகாந்த முனை, தென்காந்த முனையின் திசையைப் பொறுத்து அமைவதில்லை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in