புதிய சுற்றுச்சூழல் நூல்கள்

புதிய சுற்றுச்சூழல் நூல்கள்
Updated on
2 min read

இந்த வளர்ச்சியால் நன்மை யாருக்கு? - சுற்றுச்சூழல் நேர்காணல்கள் | ஆசை, உயிர் பதிப்பகம், தொடர்புக்கு: 98403 64783

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்குவதில் துறைசார் அறிஞர்கள், புதிய கண்டறிதல்களையும் பார்வையையும் மக்களுக்குப் பகிர்ந்துகொள்வது முக்கியமானது. அதை வெளியிடச் சிறந்த வடிவம் நேர்காணல்கள்.

சுற்றுச்சூழல் குறித்துக் கவிதைகள், கட்டுரைகள், நூல்களை எழுதியுள்ள ஆசை மேற்கொண்ட சுற்றுச்சூழல் நேர்காணல்களின் தொகுப்பு இது. முன்னோடிச் சூழலியலாளர் சு.தியடோர் பாஸ்கரன், காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப.ஜெகநாதன், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்கள் கல்யாண் வர்மா, செந்தில் குமரன், யானை ஆராய்ச்சியாளர் ஆனந்தகுமார், நெல் ஜெயராமன் ஆகியோரின் நேர்காணல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.

நறுங்கடம்பு,

கார்த்திகேயன் பார்கவிதை,

பார்கவிதை பதிப்பகம், தொடர்புக்கு: 98943 89670

மதுரைக்குக் கடம்பவனம் என்கிற பழைய பெயர் உண்டு. இன்றைய நவீன நகரமான மதுரையில் கடம்ப மரங்கள் இருக்கின்றனவா? கடம்ப மரம் எது என்பதிலேயே குழப்பம் உள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in