

சூரியனுக்கும் மகிழமரத்துக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். தொடர்பே இல்லாத இரண்டு விஷயங்களுக்கு இடையே கூர்ந்து பார்த்தால் ஆழமாகப் பல்வேறு தொடர்புகளை இயற்கை ஏற்படுத்தியிருக்கும். அப்படி ஒரு தொடர்புதான் மகிழமரத்துக்கும் சூரியனின் அடர்த்திக்கும் உள்ளது.
ஒரு பொருளின் நிறையை அதன் பருமனால் வகுத்தால் கிடைப்பது சராசரி அடர்த்தி. சூரியனின் சராசரி அடர்த்தியைக் கணக்கிட அதன் நிறை, பருமன் தெரிந்தால் போதும்.