

படங்கள்: செந்தில்குமரன்
இந்தியா போன்ற உயிர்ப்பன்மை மிகுந்த ஒரு நாட்டில், காட்டுயிர்கள்–மனிதர்கள் இடையிலான எதிர்கொள்ளல் சமீப ஆண்டுகளில் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, மனிதர்களைச் சில புலிகள் தாக்கிக் கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி நிகழும்போது, அவை 'பிரச்சினைக்குரிய புலிகள்' என அறிவிக்கப்படுகின்றன.
ஊருக்குள் நுழையும் இத்தகைய புலிகளைப் பிடிப்பது எளிய பணியல்ல; அது உயிரினப் பாதுகாப்பு, அறிவியல், சட்டம், நெறிமுறை ஆகிய அனைத்தையும் இணைக்கும் மிக நுணுக்கமான பணியாகும்.