விடை கிடைக்குமா நீர்க்காகங்களுக்கு?

விடை கிடைக்குமா நீர்க்காகங்களுக்கு?
Updated on
2 min read

பொதிகை மலையில் உற்பத்தியாகும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியும் அதன் கிளை ஆறுகளும் தென் தமிழகத்தின் உயிர்நாடி. தடுப்பணைகள், கால்வாய்கள், அவற்றுடன் இணைக்கப்பட்ட குளங்கள் எனத் தொன்மையான பாசன அமைப்பைக் கொண்டது தாமிரபரணி.

இக்குளங்கள் எண்ணற்ற உள்ளூர், வலசைப் பறவைகளை ஆதரிக்கின்றன. தாமிரபரணி பாசனக் குளங்களில் கடந்த 20 ஆண்டுகளாகப் பறவைகள் அவதானிப்பில் ஈடுபட்டுள்ள நாங்கள் அதிகமாகப் பார்த்த பறவைகளின் வரிசையில் நீர்க்காகங்களும் அடங்கும். சமீப காலமாக இவை மிகத் தீவிரமான பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகின்றன.

நீர்நிலைகளின் காவலர்கள்

நமது நிலப்பரப்பில் எந்த நீர்நிலைகளுக்குச் சென்றாலும் எளிதில் காணக்கூடிய ஒரு பறவை நீர்க்காகம். இது அனைவருக்கும் பரிச்சயமான பறவை. நீர்க்காகங்கள் மீன்களை முதன்மை உணவாகக் கொண்டு, நீர்நிலைகளின் மீன் வளத்தைச் சமநிலையில் வைத்திருக்கும் முக்கியப் பணியைச் செய்கின்றன.

சிறிய நீர்க்காகம் (Microcarbo niger), இந்திய நீர்க்காகம் (Phalacrocorax fuscicollis), பெரிய நீர்க்காகம் (Phalacrocorax carbo) ஆகிய மூன்று இனங்களும் தாமிரபரணி நிலப்பரப்பில் காணப்படுகின்றன.

நீருக்குள் திறம்பட நீந்தவும், வேகமாக மூழ்கி மீன்களைப் பிடிக்கவும் ஏற்றவாறு, கூர்மையான வளைந்த அலகு, நீளமான கழுத்து, துடுப்பு போன்ற வால், விரலிடைச்சவ்வுகளைக் கொண்ட கால்கள் போன்ற உடற்கூறு அமைப்பை இவை பெற்றுள்ளன.

பொதுவாக, நீர்ப்பறவைகளுக்கு ‘யூரோபிஜியல்’ எனப்படும் எண்ணெய்ச் சுரப்பி இருக்கும். அதிலிருந்து சுரக்கும் எண்ணெய்யை அலகால் எடுத்து இறகுகளில் பூசுவதன் மூலம், தண்ணீர் ஒட்டாமல் நீண்ட நேரம் மிதக்க உதவுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in