

இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் 1973ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட புலிப் பாதுகாப்புச் செயல் திட்டம் (Project Tiger) இந்தியாவின் மிக முக்கியமான, வெற்றிகரமான காட்டுயிர்ப் பாதுகாப்புத் திட்டமாகும். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில், இந்தியாவில் சுமார் 1,411 புலிகள் மட்டுமே இருந்தன. அதிகமான வேட்டையாடல், காடழிப்பு, மனித இடையூறுகள் காரணமாகப் புலிகள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டிருந்தன. இதைத் தடுப்பதற்காகவே புலிப் பாதுகாப்புச் செயல்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது.
தொடக்கத்தில் 9 புலிக் காப்பகங்களுடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், இன்று பெரிதும் வளர்ச்சி பெற்றுள்ளது. தற்போது இந்தியாவில் 18 மாநிலங்களில் சுமார் 58 புலிக் காப்பகங்கள் உள்ளன. இவை சுமார் 84,000–85,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டதாகவும், நாட்டின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 2.3–2.5 சதவீதத்தைப் பாதுகாப்பதாகவும் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையான காப்பகங்கள் பல்வேறு ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அமைந்துள்ளன.
களக்காடு முண்டந்துறை காட்டுப் பகுதி