

சாதிக்காய், துலுக்க சாமந்தி
சாதி, மதரீதியிலான வகைப் பாடுகள் மனிதச் சமூகத்தின் முகவரிகளோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவை தாவரங்கள், மலர்கள், விதைகள், மரங்களின் வழக்கப் பெயர்களிலும் நீக்கமறக் கலந்திருக்கின்றன
தாவரப் பெயர்களிலும்...
ஐந்திணைகளில் ஒன்றுக்குப் பெயர் தந்த முல்லை மலர் (Jasminum grandiflorum), சாதிமல்லி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறது. தென் தமிழகத்தில் பிச்சிப்பூ எனவும் சந்தனமல்லி என்றும் அழைக்கபடும் இம்மலர் சங்க இலக்கியங்களில் தளவம், கொகுடி என அழகுற அழைக்கப்பட்டிருக்கிறது.