கடல் வழியே வரும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள்

கடல் வழியே வரும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள்
Updated on: 
3 min read

பல நூறு ஆண்டுகளாகவே சரக்கு வர்த்தகத்தின் முதன்மையான போக்குவரத்து வழியாகக் கடல்தான் இருந்துவருகிறது. இன்றளவும், உலக வர்த்தகத்தின் 80% கடலையே சார்ந்துள்ளது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் இன்னும் 5% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் வர்த்தகக் கப்பல்கள் வணிகப் பொருள்களை மட்டுமே ஏற்றிவருவது இல்லை, இலவச இணைப்பாக ஆயிரக்கணக்கான அந்நியக் கடல் உயிரினங்களையும் கொண்டுவருகின்றன. சரக்குக் கப்பல்களின் நிலைத்தன்மை/சமநிலையைப் பராமரிப்பதற்காக, பல கோடி லிட்டர் நிலைப்படுத்தும் நீராகக் (Ballast Water) கடல்நீர் பயன்படுத்தப்படும்.

இதற்கான நீரைக் கடலில் இருந்து எடுக்கும்பொழுது நீருடன் நுண்ணுயிரிகள் முதற்கொண்டு சிற்றுயிர்களும் சேர்ந்துவருவதைத் தவிர்க்க இயலாது. பின்னர் அந்தக் கப்பல் அடுத்த துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றும்போது, எடை கூடுவதற்கு ஏற்பச் சமப்படுத்தும் நீரை வெளியேற்றும். அவ்வாறான நேரத்தில் ஆக்கிரமிப்புத்தன்மை கொண்ட சில உயிரினங்களும் வெளியேறும்.

நீண்ட தூரம் பயணிக்கும் கப்பல்களின் அடிப்பகுதியில் பலவகையான பாசிகள், கொட்டலசு (barnacles), மட்டிகள் (mussels), பிற நீர்வாழ் உயிரினங்கள் ஒட்டிக்கொண்டு பயணிக்கும்.

இந்த நிகழ்வு ‘உயிரியல் படிதல்’ (Biofouling) எனப்படுகிறது. இந்த உயிரினங்கள் குறுகிய காலத்திலேயே இனப்பெருக்கம் செய்து, இளம் உயிரிகளை அடுத்தடுத்த கடல் பகுதிகளில் பரவ வைக்கும்.

நிலைப்படுத்தும் நீர், உயிரியல் படிதல் மூலம் துறைமுகங்களில் ஆக்கிரமிப்பு உயிரினங்களின் வகை, எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாகவே அந்தப் பகுதிகளில் இருக்கும் உள்நாட்டு இனங்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ளும். மேலும் இது கடல் சூழலியலையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும்.

பழவேற்காடு பிரச்சினை

சென்னைக் கடற்பகுதியில் சமீபக் காலமாகப் பரவிவரும், தென்னமெரிக்காவைப் பூர்விகமாகக் கொண்ட காக்கா ஆழி எனப்படும் மட்டி (Mytella strigata), எண்ணூரிலுள்ள 11 மீன்பிடி தலங்களையும் பழவேற்காடு ஏரியின் சில பகுதிகளையும் ஆக்கிரமித்துவருகிறது.

Loading content, please wait...

X