

சிறுவயதில் மாங்காய் அடித்துத் தின்றிருப்போம். மரத்தில் தொங்கும் மாங்காயைக் குறிபார்த்துக் கல்லெறிதல் ஒரு கலை. சரியான வேகத்தில், சரியான கோணத்தில் கல்லை எறியவில்லை என்றால், மாங்காயை அடிக்க முடியாது. பத்து முறை கல் எறிந்தால் ஐந்து முறை மாங்காய் விழுந்தாலே அதிகம். இதில் துல்லியத் தன்மை 50%.
ஆனால், ஒரு மீன் தனது இரையைக் கிட்டத்தட்ட 90 முதல் 95% துல்லியத்தன்மையோடு மாங்காய் அடிப்பதுபோல் தனது இரையை வீழ்த்துகிறது. அது ‘ஆர்ச்சர் பிஷ் (Archer Fish)’. தமிழில் வில்லாளி மீன் எனலாம். இதன் வேட்டையாடும் திறமைக்குப் பின்னால் இருக்கும் இயற்பியல் நம்மை வியக்க வைக்கும்.