ஒட்டகச்சிவிங்கி எவ்வாறு தண்ணீர் குடிக்கிறது? | இயற்கையில் அறிவியல் 17

ஒட்டகச்சிவிங்கி எவ்வாறு தண்ணீர் குடிக்கிறது? | இயற்கையில் அறிவியல் 17
Updated on
2 min read

தாகமெடுத்தால் தண்ணீர் குடிப்பது நமக்கு ஒரு சாதாரண நிகழ்வு. வாயைத் திறந்து தண்ணீரை ஊற்றினால் தொண்டை வழியாக ஈர்ப்புவிசை காரணமாகத் தண்ணீர் வயிற்றுக்குள் சென்றுவிடுகிறது. பெரிதாக நாம் மெனக்கெடத் தேவையில்லை. ஆனால் ஒட்டகச்சிவிங்கி போன்ற உயரமான விலங்குகளுக்குத் தண்ணீர் குடிப்பது என்பதே ஒரு பெரிய செயல்முறை. போராட்டம் என்றுகூடச் சொல்லலாம்.

நமக்குச் சாதகமாக இருக்கும் ஈர்ப்புவிசை ஒட்டகச்சிவிங்கிக்கு அதன் உயரம் காரணமாகச் சாதகமாக இல்லை. ஆனால், ஈர்ப்புவிசையை வெல்வதற்கு ஓர் அருமையான இயந்திரப்பொறியியல் முறையைப் பரிணாம வளர்ச்சி ஒட்டகச்சிவிங்கிக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது.

ஒட்டகச்சிவிங்கி தண்ணீர் குடிப்பதில் என்ன சிக்கல்? - ஒட்டகச்சிவிங்கி அதன் உயரம் காரணமாக அப்படியே குனிந்து தண்ணீர் அருந்த முடிவதில்லை. இரண்டு முன்னங்கால்களையும் நன்றாக அகட்டி வைத்து, இரண்டரை மீட்டர் நீளமுள்ள அதன் கழுத்தைக் கிட்டத்தட்ட 50 டிகிரி கோணத்தில் தரைக்குக் கொண்டுவந்து தண்ணீரைப் பருக முயல்கிறது. இப்படிக் குனிந்தாலும் அதன் தோள்பட்டை ஆறு அடி உயரத்தில் இருக்கிறது. நீர்ப் பரப்பிலிருந்து ஆறு அடி உயரத்துக்கு வாய் மூலம் தண்ணீரை உறிஞ்சி எப்படிக் கொண்டுசெல்வது?

ஈர்ப்புவிசைக்கு எதிராக வேலை செய்ய வேண்டும். வீடுகளில் மின்மோட்டார் பயன்படுத்தி எவ்வளவு உயரத்திற்கு வேண்டுமானாலும் தண்ணீரைக் கொண்டுசெல்கிறோம். ஒட்டகச்சிவிங்கி என்ன செய்யும்? மனிதர்கள் தண்ணீரை அண்ணாந்து குடிக்காமல் வாய் வைத்துக் குடித்தால் ஒவ்வொரு தடவையும் தண்ணீரை வாய்க்குள் இழுத்து விழுங்க வேண்டும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in