

இருபது ஆண்டுகளுக்கு முன் பறவைகளை நோக்கத் தொடங்கியிருந்த காலம். கிளியூர் ஏரிக்கு நீர்ப்பறவைகள் வரும் எனக் கேள்விப்பட்டிருந்தேன். அதற்காக திருச்சி மாவட்டத்தின் திருவெறும்பூரிலிருந்து காவிரிக் கரை நோக்கிப் போய்க்கொண்டிருந்தேன்.
காவிரிக் கரையோரம் இருந்த ஒரு கிராமத்தில் உயரமாக வளர்ந்திருந்த மரத்தையும், அதில் செம்பழுப்பு நிறத்தில் தடித்த இதழ்களைக் கொண்டு பெரிதாகப் பூத்து, கீழே விழுந்துகிடந்த மலர்களையும் பார்த்தேன்.