பெயர்களில் பாலினப் பாகுபாடு

பெயர்களில் பாலினப்  பாகுபாடு
Updated on
3 min read

காட்டுயிர்கள் இயற்கையின் செறிவான படைப்பு. அவை மனிதர்கள் கட்டமைத்திருக்கும் பாலினப் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டவை; ஆனால், பறவையியல், விலங்கியல் துறைகளில் ஆவணப்படுத்துதல் என்பது வரலாற்றுரீதியாக ஆண்களின் ஆதிக்கத்திலேயே இருந்ததால், அவர்கள் வைத்த பெயர்களிலும் அந்த ஆணாதிக்கச் சிந்தனையின் தாக்கம் ஆழப் பதிந்திருப்பதைக் காண முடிகிறது.

ஏன் அரசன்?

சங்க இலக்கியத்தில் ‘செஞ்செவி எருவை’ என்றும், பொதுவாக ‘செம்முகப் பாறு’ என்றும் அழைக்கப்படும் ‘பாறு’ கழுகு வகையை ஆங்கிலத்தில் ‘King Vulture’ என்கிறார்கள். ஆண், பெண் என இரு பாலினத்துக்கும் பொதுவான ஒரு பறவைக்கு ஏன் ‘அரசன்’ (King) என்கிற மகுடம் சூட்ட வேண்டும்? அப்படியென்றால், அதன் பெண்பால் பறவையை ‘Queen Vulture’ என்றுதானே அழைக்க வேண்டும்?

இங்கு நாம் கவனிக்க வேண்டியது இவ்வினத்தில் ஆண், பெண் இரண்டுமே தோற்றத்தில் (Plumage) ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால், அவற்றின் கண் விழிப்பாவையின் (Iris) நிறத்தை வைத்து, அவை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்துவிடலாம்.

நன்கு வளர்ந்த ஆண் பறவையின் கண் விழிப்பாவை வெளிர் மஞ்சள் (Pale whitish) நிறத்திலும், முதிர்ந்த பெண் பறவையின் விழிப்பாவை அடர் பழுப்பு (Dark brown - கபில) நிறத்திலும் இருக்கும்.

இதில் இன்னொரு வியப்பான செய்தி என்னவென்றால், இவ்வினத்தில் ஆண் பறவையைக் காட்டிலும் பெண் பறவைதான் உடலமைப்பில் சற்றே பெரியதாகவும், அதிக எடையுடன் மிடுக்காகவும் இருக்கும். இவ்வளவு சிறப்புகள் ஆணைக் காட்டிலும் இருந்தபோதிலும், இப்பறவைக்கு ‘ராஜாளி’ (King Vulture) என்றே பெயரிடப்பட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும்.

ஆண் விகுதிகள்!

இதே நிலைதான் மீன்கொத்திப் பறவைக்கும். ஆங்கிலத்தில் அதனை ‘Kingfisher’ என்கிறோம். ஆண் பறவையைப் போலவே அதே துல்லியத்துடன், அதே திறனுடன் மீனை வேட்டையாடினாலும், பெண் மீன்கொத்திக்கு ‘Queenfisher’ என்கிற பெயர் வழங்கப்படுவதில்லை. திறமை என்பது இங்கு ஆண் விகுதிக்குள்ளேயே அடக்கப்பட்டுவிடுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in