காட்டின் பொறியாளர்கள் | காடு என்ன சொல்கிறது? - 13

காட்டின் பொறியாளர்கள் | காடு என்ன சொல்கிறது? - 13
Updated on
2 min read

உலகில் அதிக எண்ணிக்கையிலான ஆசிய யானைகள் வாழும் நாடு இந்தியா. உலகம் முழுவதும் சுமார் 50,000 ஆசிய யானைகள் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இதில் இந்தியாவில் சுமார் 27,000 முதல் 30,000 யானைகள் வரை வாழ்கின்றன. உலகின் ஆசிய யானைகள் எண்ணிக்கையில் பாதிக்கு மேல் இந்தியாவிலேயே உள்ளது.

காட்டுச் சூழலின் சமநிலையைப் பேணுவதில் யானைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. விதைகளைப் பரப்புவதாலும், காடு புதுப்பிக்கப்படுவதாலும் அவை ‘காட்டின் பொறியாளர்கள்’ என அழைக்கப்படுகின்றன. இருந்தாலும் காடு சுருங்குதல், மனித–யானை எதிர்கொள்ளல், வாழிட அழிப்பு போன்ற காரணங்களால் யானைகள் பல சவால்களை எதிர்கொள்கின்றன.

யானை பாதுகாப்புத் திட்டம்

மத்திய அரசின் யானை பாதுகாப்புத் திட்டமான Project Elephant, 1992 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் நோக்கம் காட்டு யானைகள், அவற்றின் வாழிடங்களைப் பாதுகாப்பது, மனித–யானை எதிர்கொள்ளலைக் குறைப்பது, யானைகளின் எண்ணிக்கையை நிலைநிறுத்துவது ஆகியவையே. யானைகளைப் பாதுகாக்க அவற்றின் நிலப்பரப்புகள் வெவ்வேறு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in