

இன்று பூமியில் வாழும் மிகப் பெரிய நிலவாழ் உயிரினங்களில் ஒன்றான யானை, ஒரே இரவில் இப்படிப் பெரிய உருவத்தைப் பெற்றுவிடவில்லை. சுமார் 6 கோடி ஆண்டுகளாக நீண்ட பரிணாமப் பயணத்தைக் கடந்து, அதன் உடல் அமைப்பு, அளவு, அறிவு பலமுறை மாறி வளர்ந்து வந்ததே இன்றைய யானை.
யானைகளின் பரிணாமம் பேலியோசீன் காலத்தில், 6 கோடி ஆண்டுகளுக்கு முன், எரிதீரியம் (Eritherium) என்கிற நரி அளவுள்ள சிறிய உயிரினத்திலிருந்து தொடங்கியது. அதற்குத் தந்தங்களோ நீண்ட தும்பிக்கையோ இல்லை. ஆனால், இதுவே யானைக் குடும்பத்துக்கான அடிப்படை விதையாக இருந்தது.