சூழலியல் நிகழ்வுகள் 2025

சூழலியல் நிகழ்வுகள் 2025
Updated on
2 min read

சர்வதேச விருது: ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் ‘சாம்பியன் ஆஃப் எர்த்’ விருது, தமிழக அரசின் சுற்றுச்சூழல் - வனத்துறை கூடுதல் செயலாளர் சுப்ரியா சாஹுவுக்கு வழங்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாடு குறைப்பு, அலையாத்திக் காடுகள் அதிகரிப்பு, அரிய உயிரினங்கள் பாதுகாப்பு, தமிழகத்தில் வெப்பநிலைக் குறைப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு உள்ளிட்டவற்றில் அவரது பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

கைவிடப்பட்ட டங்ஸ்டன் சுரங்கம்: மதுரை மேலூர் அருகேயுள்ள அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் குத்தகை ஏலம் விடும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து, அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டனர். அவர்களில் சிலர் 2025 ஜனவரி மாதம் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியைச் சந்தித்து, அந்தப் பகுதி பல்லுயிர்ப் பெருக்கம், பாரம்பரியத் தலங்களைக் கொண்டிருப்பதாக எடுத்துரைத்தனர். இதன் தொடர்ச்சியாக, டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன்: கன்னியாகுமரி, சென்னை அருகே ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை ஓஎன்ஜிசி மேற்கொள்ள, 2025 ஏப்ரலில் மத்திய அரசு அனுமதியளித்தது. எரிசக்தித் துறையில் இறக்குமதியைக் குறைக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் திட்டத்தால் கடல்வளம் பாதிக்கப்படும் என்று கூறித் தமிழகத்தில் மீனவர் அமைப்புகளும் சில கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in