மாநில விலங்கின் இன்றைய நிலை

மாநில விலங்கின் இன்றைய நிலை
Updated on
2 min read

மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய தனிச்சிறப்பான விலங்கு நீலகிரி வரையாடு. ‘வரை' என்றால் பாறை; செங்குத்தான பாறைப்பகுதிகளில் இவை வாழ்வதால் ‘வரையாடு' என அழைக்கப்படுகிறது.

உலக அளவில் அறியப்படும் மூன்று வகை வரையாடுகளில், தென்னிந்தியாவில் காணப்படும் ஒரே இனம் இது. தமிழகத்தின் மாநில விலங்கான இது, கடல் மட்டத்திலிருந்து 300 முதல் 2,600 மீட்டர் உயரத்தில் வாழ்கிறது.

இலக்கியமும் தொல்லியலும்

சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, நற்றிணை, ஐங்குறுநூறு, பரிபாடல் போன்ற நூல்களில் வரையாடும் அதன் மலை வாழ்விடங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழர் பண்பாட்டில் வரையாடு தொன்றுதொட்டுப் பெற்றுவந்த முக்கியத் துவத்தை இது வெளிப்படுத்துகிறது. கேரளத்தின் மறையூருக்கு அருகில் உள்ள எழுத்துப்பாறைப் பகுதியில் இடைக்கற்காலத்தைச் சேர்ந்த வரையாடு ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது மனிதர் களுக்கும் வரையாட்டுக்குமான பல்லாயிரம் ஆண்டுக் காலத் தொடர்பை உணர்த்துகிறது.

வாழ்க்கை முறை

பொதுவாகப் பெட்டை ஆடுகளும் குட்டிகளும் சேர்ந்த கூட்டமாக வரையாடுகள் வாழ்கின்றன. வயது முதிர்ந்த கிடாய்கள் பெரும்பாலும் தனித்தோ அல்லது சிறு குழுக்களாகவோ காணப்படும். கிடாய்கள் உருவத்தில் பெரிதாகவும் நீளமான கொம்புகளுடனும் காணப்படுகின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in