பூமியில் 2 கோடி பூச்சி இனங்களா?

பூமியில் 2 கோடி பூச்சி இனங்களா?
Updated on
2 min read

பூமியில் வாழும் உயிரினங்களில் எண்ணிக்கையிலும் பன்முகத் தன்மையிலும் சூழலியல் முக்கியத்துவத்திலும் பூச்சிகளுக்கு நிகராக வேறு எந்த உயிரினக் குழுவும் இல்லை. பூமியில் சுமார் 55-60 லட்சம் பூச்சி இனங்கள் இருக்கலாம் என்பதே அறிவியல் உலகின் மதிப்பீடாக இருந்தது.

ஆனால், Proceedings of the National Academy of Sciences (PNAS) ஆய்விதழில் சமீபத்தில் வெளியான ஆய்வு, இந்தக் கணிப்பைத் தலைகீழாக மாற்றியுள்ளது. பூமியில் 2.03 கோடி பூச்சி இனங்கள் இருக்கலாம் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இதுவரை அறிவியல் உலகம் முறையாக விவரித்துப் பெயரிட்டிருப்பது சுமார் 12 லட்சம் பூச்சி இனங்களை மட்டுமே! விஞ்ஞானி ராபர்ட் கோல்வெல் தலைமையிலான குழுவினர், மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவின் வெப்பமண்டலக் காடுகளில், மரபணு அடையாளத் தொழில்நுட்பத்தைப் (DNA Barcoding) பயன்படுத்தி ஆய்வுகள் நடத்தினர்.

ஆய்வாளர்கள் சேகரித்த 16 லட்சம் பூச்சி மாதிரிகளில், 53,945 தனித்துவமான இனங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனுடன் உலகிலுள்ள மரங்களின் தோராய எண்ணிக்கை, ஒவ்வொரு மரத்துடனும் தொடர்புடைய பூச்சிகளின் பன்முகத்தன்மை உள்ளிட்ட தரவுகளைக் கணித மாதிரியுடன் இணைத்து உலகளாவிய மதிப்பீட்டை உருவாக்கினர். அதன் முடிவில், பூமியில் சுமார் 2.03 கோடி பூச்சி இனங்கள் இருக்கலாம் எனக் கணித்துள்ளனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in