

‘வேர்கள், கிழங்கு திருவிழா 2023’ ஏப்ரல் 16 (ஞாயிறு) அன்று காலை 9 முதல் 7 வரை தி.நகர் தக்கர் பாபா வித்யாலயாவில் நடக்க இருக்கிறது. ஆஷா – தமிழ்நாடு, பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு, தக்கர் பாபா வித்யாலயா, சஹஜா விதைகள் ஆகிய அமைப்புகள் இணைந்து இதை ஏற்பாடு செய்துள்ளன.
இயற்கை உணவு, நாட்டுப்பருத்தியினால் ஆன துணி, ஆயத்த ஆடைகள், மாடித் தோட்டம் உள்ளிட்டவை குறித்த கண்காட்சியும் விற்பனையும் நடைபெறும். கிழங்குகளின் நன்மைகள் குறித்து நிபுணர்கள் உரையாற்றுகிறார்கள்.
தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஆணையர் - அரசு செயலாளர் சி.சமயமூர்த்தி இ.ஆ.ப., சென்னைப் பெருநகரக் குடிநீர் வழங்கல் - கழிவுநீர் அகற்றுதல் வாரியச் செயல் இயக்குநர் ராஜ கோபால் சுங்கரா இ.ஆ.ப., திரைப் பிரபலம் ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
கூடுதல் தகவலுக்கு: கோபி 97909 00887 / திலக்: 94457 99577