வழிகாட்டும் மொழி: பகிர்ந்து உண்ட வேளாண்மை

வழிகாட்டும் மொழி: பகிர்ந்து உண்ட வேளாண்மை
Updated on
1 min read

# உழவு என்பது உரிய நேரத்தில் தாமதமின்றிச் செய்யப்பட வேண்டிய ஒரு செயல், உழவில் உரிய நேரத்தில் ஒரு செயல்பாட்டைச் செய்யத் தவறினால், பின்னர் உரிய நேரத்தில் அறுவடையும் செய்ய முடியாது. அதை வலியுறுத்தும் கால மேலாண்மைக்கு எடுத்துக்காட்டாகக் கீழ்க்கண்ட பழமொழி கூறப்படுகிறது: ‘உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை’.

# உழும் நாளில் ஊருக்குப் போய்விட்டால், அறுவடைக்கு ஆளே வேண்டாம், அதாவது விளைச்சலே இருக்காது, பின் எப்படி அறுப்பது என்பதே இந்தப் பழமொழி சொல்லும் உண்மை.

# உழவுத்தொழில் என்பது பண்டைய நாட்களில் இருந்தே லாபம் தரும் தொழிலாகக் கருதப்பட்டதில்லை. அதற்குப் பதிலாக வேளாண்மை ஒரு வாழ்க்கை முறையாகவே இருந்துவந்துள்ளது. விளையும் விளைச்சலை அனைவரும் பகிர்ந்துகொண்டு வாழும் முறையாகவே உழவு அன்றைக்கு இருந்தது. தனக்கென்று மிச்சம் வைத்துச் சேமித்துக்கொள்ளும் முறை, அன்று இருந்ததில்லை.

# பணத்தை அடிப்படையாகக்கொண்ட லாப நோக்குடைய தொழிலாகப் பின்னர் அது மாறியபோது, வருமானம் குறைந்தது. ஆனாலும் மற்றத் துறைகளில் உள்ள சாதகத் தன்மைகள் வேளாண்மையில் இல்லாததால், பொருளாதார ரீதியாக அது தோல்வியடைந்தது. இதைத் தெரிவிக்கவே பின்வரும் பழமொழி உருவானது:

# ‘உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது’.

# ஆனாலும்கூட வேளாண்மை செய்வதைப் பண்டைய மக்கள் பெருமையாகக் கருதினார்கள். அதை விளக்க வந்த பழமொழி,

# ‘சீரைத் தேடின் ஏரைத் தேடு’. அதாவது, சீரும் சிறப்புமாக வாழ வேண்டுமானால் உழவைத் தேடிக் கொள் என்பதே இதன் பொருள்.

- பாலசுப்பிரமணியன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in