சாரல் இயற்கை அங்காடி

சாரல் இயற்கை அங்காடி
Updated on
1 min read

மளிகைக் கடையில் பொருட்களை வாங்கத் தொலைபேசியில் தொடர்புகொள்வது சுலபமாக இருக்கிறது. பசுமை அங்காடி என்றால் நேரில் போய் வாங்க வேண்டுமே என்பதைக் கஷ்டமாக நினைக்கிறீர்களா? கவலை வேண்டாம், போரூர் லட்சுமிபுரத்தில் இயங்கிவரும் சாரல் இயற்கை அங்காடி இதற்கு ஏற்பாடு செய்கிறது.

அந்த ஏற்பாட்டை அறியும்முன் சாரல் அங்காடி பற்றிச் சிறிய அறிமுகம்: ஆர்கானிக் பொருட்கள் பற்றி எல்லோரும் தெரிந்து வைத்திருந்தால் மட்டும் போதாது.

அது அனைவருக்கும் வீட்டுக்கு அருகில் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்ட கடைகளில் ஒன்றுதான் சாரல்.

"மக்களுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு, அவற்றைச் சிறப்பான முறையில் வழங்கவேண்டும். மக்களின் தேவைக்கு ஏற்ற அனைத்துப் பொருட்களையும் வைத்திருக்கிறோம்.

தேன் அதிகமாக விற்பனையாகிறது. அதனால், அதன் உற்பத்தி அதிகமாக இருக்கிறது. விலையையும் குறைவாகத் தர முடிகிறது. அதுபோல மக்களின் தேவையைப் பொறுத்துத்தான் ஒவ்வொரு பொருளின் விலையும் இருக்கும்" என்கிறார் கடை உரிமையாளர் செந்தில்வேலன்.

பெண்கள் அதிக ஆர்வம் காட்டும் ஷாம்பு வகைகள் இங்கே கிடைக்கின்றன. செம்பருத்தி இயற்கை ஷாம்பு போன்ற வித்தியாசமான வகைகளும் உண்டு.

"பல பிராண்டட் பொருட்கள் இங்கே கிடைத்தாலும், இயற்கை விவசாயிகள் சிறுதொழில் மையங்களில் தயாரிக்கும் மண்வாசனையுள்ள பொருட்களும் கிடைப்பதால்தான், நான் இங்கு அடிக்கடி வருகிறேன்" என்கிறார் இந்தக் கடையின் வாடிக்கையாளர் மஞ்சுளா.

எந்தப் பொருள் என்றாலும், கடைக்குச் சென்று வாங்குவதைவிட வீட்டுக்கே எல்லாப் பொருட்களையும் வரவழைப்பதுதான் வசதி என்று கூறுபவர்களுக்கு, இவர்களுடைய டோர் டெலிவரி முறை உதவும்.

இணையதளத்தில் பொருட்களை ஆர்டர் செய்தால், வீட்டில் வந்து பணம் பெற்றுக் கொள்ளும் கேஷ் ஆன் டெலிவரி சேவை, வாடிக்கையாளருக்குக் கூடுதல் வசதியைத் தருகிறது.

தொடர்புக்கு: 7401497555

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in