

சமீபகாலமாகப் புகைபிடிப்பது பல மடங்கு அதிகரித்து வருகிறது. சிகரெட் பிடித்து முடித்தவுடன், அதன் பஞ்சு வைத்த பகுதி (சிகரெட் பட்) என்னவாகிறது என்று தெரியுமா? கடற்கரை, நீர்வழிச்சாலை, நன்செய் நிலங்கள் ஆகியவற்றில் இவை தேங்கிவிடுகின்றன.
புகையிலை மக்கும் பொருளாக இருந்தாலும், பிளாஸ்டிக் துகள்களால் செய்யப்பட்ட உதட்டில் பொருத்தக்கூடிய சிகரெட்டின் முனைப்பகுதி எளிதில் மக்கிப் போகாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
எனவே, இனிப் புகைபிடிப்பது உங்கள் உடல்நலத்துக்கு மட்டும் கேடு என்று நினைக்க வேண்டாம். உங்களுடைய புகைபிடிக்கும் பழக்கம் சூழலையும் மாசுபடுத்துகிறது என்பதை நினைவில் கொள்ளவும்!