

தேசிய கைத்தறி நாளை ஒட்டி ஆகஸ்ட் 6, 7, 8 (வெள்ளி முதல் ஞாயிறுவரை) இயற்கை உணவு, உடைகள், விதைகள் கண்காட்சியை சென்னை தக்கர் பாபா வித்யாலயாவில் பாதுகாப்புக்கான உணவு கூட்டமைப்பு நடத்துகிறது.
காந்தியைப் பற்றி அதிகம் பேச வேண்டிய தேவை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது எழுந்துள்ளது. இந்தச் சூழலில், காந்தியச் சிந்தனைகளையும் தத்துவங்களையும் குறித்து நீண்ட காலமாகப் பேசி வருபவர்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் விதமாக சென்னை தக்கர் பாபா வித்யாலயாவில் ‘காந்தியைப் பேசுவோம்’ எனும் மாதாந்திர நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் காந்திய வாதிகள் / நிபுணர்களின் உரை, இசை, கதைசொல்லல், நூற்புப் பட்டறைகள், குழு விவாதங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. ஒரு நிபுணர் ஒரு குறிப்பிட்ட விஷயம் சார்ந்து பேசுவார், தொடர்ந்து குழு விவாதம் நடத்தப்படும். இதில் பங்கேற்பவர்கள் நிகழ்வுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பும் பின்பும் ஒன்றாகச் சேர்ந்து நூற்க முடியும்.
தக்கர் பாபா வித்யாலயாவில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி காலை 11 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கு கிறது. இந்த நிகழ்வின் அடுத்த சந்திப்புகள் ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமையும் அதே வளாகத்தில் நடத்தப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு: 98408 73859, 73388 83075