கிளிகளிடமிருந்து காப்பாற்றப்பட்ட பூமி

கிளிகளிடமிருந்து காப்பாற்றப்பட்ட பூமி
Updated on
1 min read

கிளிகள் வனத்துக்குச் சென்றுவரும் பாதையில்

எங்கள் வீடு இருக்கிறது

எண்ணற்ற கிளிகளின் பசுமைவரிசை

எங்களுக்கு மேல் வானத்தில்

வரும் போகும்

அவற்றில் சில

எங்கள் வீட்டு மரங்களில் இறங்கி ஓய்வெடுக்கும்

நாங்கள் நகரத்தில் வசிப்பவர்கள்

எந்தக் கானகத்திலிருந்து எந்தக் காட்டுக்கு

எந்த விடியலில் எந்த வேலையிடத்திற்கு

தினமும் அந்தக் கிளிகள் செல்கின்றனவென்று

எங்களுக்கு எப்படித் தெரியும்

எந்தக் கிளிக்கூட்டம்

எங்கள் மரங்களில் வந்தமரும்

எவை அமராதென்று

நானும் எனது மகளும்

அடிக்கடி

பந்தயம் வைப்போம்.

கிளிகள் எங்களைப் பார்ப்பதில்லை

அவற்றின் பார்வை மரங்களையும்

அவற்றின் கனியையும்

பார்ப்பதற்குப் பழக்கப்பட்டவை.

கிளிகள்

பச்சை வானமாக மாறுகின்றன

பூமியைப் போர்த்துகின்றன

பாதிக் கடித்த பழத்தைப் போல

கிளிகள் பூமியை நீங்குகின்றன

எனது மகள்

கனியை இந்தப் பூமியை,

காப்பதற்காக

கிளிகளைத் துரத்திச் செல்கிறாள்

வானத்தில், இருட்டில்

அந்தக் கிளிகள் தொலைவிலெங்கோ மறைகின்றன

என் மகள்

பூமியைத் தழுவி ஆறுதல் சொல்லியபடி

பச்சை ஒளிர

தனியே நிற்கிறாள்.

நன்றி: A Name for Every Leaf, தமிழில்: ஷங்கர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in