Published : 13 Feb 2016 11:56 AM
Last Updated : 13 Feb 2016 11:56 AM

15 நிமிடங்களுக்கு பறவைகளைப் பாருங்கள்!

ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC-2016) பிப்ரவரி 12-15-ம் தேதிகளில் உலகெங்கும் நடக்கிறது. இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் தங்களைச் சுற்றியுள்ள பறவைகளைக் குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்குப் பார்த்து, அடையாளம் கண்டு, அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து eBird ( >www.ebird.org/india) எனும் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

வீடு, பள்ளி, கல்லூரி வளாகத்திலோ பூங்கா, ஏரி, குளம் போன்ற பொது இடங்களிலோ பறவைகளைக் கவனித்து eBird-ல் பட்டியலிடலாம். கல்வி நிறுவனங்கள், மற்ற நிறுவன வளாகங்களில் உள்ள பறவைகளை மொத்தமாகவும் கணக்கெடுக்கலாம். இந்தப் பறவைகள் கணக்கெடுப்பை இந்தியப் பறவைகள் கணக்கெடுப்புக் கூட்டமைப்பு (The Bird Count India Partnership) ஒருங்கிணைக்கிறது.

கடந்த ஆண்டு ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பில் நாடெங்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று, 7000 பட்டியல்களைப் பதிவேற்றினர். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 735 பறவையினங்கள்தான், உலகிலேயே இரண்டாவது அதிகப் பறவையினங்கள். அதில் காக்கை, மைனா, குயில், கரிச்சான் ஆகிய பறவைகள் பரவலாக இருப்பதாகத் தெரியவந்தது.

மேலும்விவரங்களுக்கு: >http://www.birdcount.in
தொடர்புக்கு: birdcountindia@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x