நிறைவு தரும் இயற்கை

நிறைவு தரும் இயற்கை
Updated on
1 min read

சென்னையைச் சேர்ந்த காயத்ரி சுந்தருக்கு, இயற்கை மீது தீராத ஆர்வமும் ஈடுபாடும். வீட்டைச் சுற்றியுள்ள உயிரினங்களை மட்டுமல்லாமல் காட்டுக்குள் குடியிருக்கும் உயிரினங்களையும் புகைப்படம் எடுத்துவருகிறார். இதற்காகவே சரணாலயங்களுக்கும் தேசியப் பூங்காக்களுக்கும் அடிக்கடி பயணம் செல்கிறார்.

"எனக்குத் திருமணமாகி 13 வருஷமாகுது. நான் என் கணவரோட விளம்பர ஏஜென்ஸி தொழிலைக் கவனிச்சுக்கறேன். வீடு, அலுவலகம்னு எப்பவும் ஏதாவது வேலை இருந்துக்கிட்டே இருக்கும். இருந்தாலும் கிடைக்கிற கொஞ்ச நேரத்தையும் இயற்கையோட செலவிடறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்" என்று சொல்லும் காயத்ரி, புகைப்படம் எடுக்க யாரிடமும் பயிற்சி எடுத்ததில்லை. கடந்த நான்கு வருடங்களாக உயிரினங்களையும், பறவைகளையும், நிலப்பரப்பையும் படம் எடுத்துவருகிறார்.

"எந்த விலங்கையும் தேடிப்போய்ப் படமெடுத்தது இல்லை. என் கண்ணில் தட்டுப்படும் உயிரினங்களைப் படம்பிடித்திருக்கிறேன். ஆனால் அந்தப் படம் சரியாக அமையணுமேன்னு காத்திருந்து படமெடுத்திருக்கிறேன். ஒருமுறை தலைக்காவிரி பிறக்கும் கூர்க் சென்றிருந்தபோது இரண்டு ஆரஞ்ச் கவுண்டி பறவைகளைப் பார்த்தேன். அவை இரண்டும் ஒரே கோணத்தில் திரும்புகிற அரை நொடிக்காகக் காத்திருந்து படமெடுத்தேன். எங்கள் அலுவலகத்தின் பக்கத்தில் இருக்கும் முருங்கை மரத்தில் இருக்கிற அணில் அடிக்கடி எங்கள் அலுவலக ஜன்னல் பக்கம் வந்துவிட்டுச் செல்லும். அப்படி வந்தபோது அதை மிக அருகில் இருந்து படமெடுத்தேன். இப்படி ஒவ்வொரு படத்துக்குப் பின்னாலும் ஒரு நினைவு இருக்கிறது, நிறைவும் இருக்கிறது" என்கிறார் காயத்ரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in