Last Updated : 11 May, 2021 09:53 AM

 

Published : 11 May 2021 09:53 AM
Last Updated : 11 May 2021 09:53 AM

சேதி தெரியுமா?

மே 2: டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உறுதியானதை கனடா நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
மே 4: ஊடகங்களில் பணிபுரிவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப் படுவார்கள் என்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கவிருந்த மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
மே 4: மகாத்மா காந்தியின் தனிச்செயலா ளராக இருந்த வி.கல்யாணம் (98), சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி (87) ஆகியோர் காலமானார்கள்.
மே 5: இந்தியாவில் முதன்முறையாக ஹைதராபாத் விலங்குக் காட்சியகத்தில் எட்டுச்சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதியானது.
மே 5: மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாம் முறையாகப் பதவியேற்றார்.
மே 5: கரோனா பரவலையடுத்து ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை ஒத்திவைப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.
மே 6: உலக அளவில் தற்போது ஏற்படும் கரோனா பாதிப்பில் 46 சதவீதம் இந்தியாவைச் சார்ந்தது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
மே 6: ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதல் பத்துஇடங்களுக்குள் நுழைந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்கிற பெருமையை ரிஷப் பந்த் பெற்றார்.
மே 7: தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், அவரோடு 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நான்காம் முறையாகப் பதவியேற்றார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சொராப்ஜி (91) - மே 1, முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் மகனும் மத்திய முன்னாள் அமைச்சருமான அஜித் சிங் (82) - மே 6, நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் பாண்டு (74) - மே 6 ஆகியோர் உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x