முன்னுதாரணமற்ற சூழலியல்காலநிலை சிறப்பிதழ்

முன்னுதாரணமற்ற சூழலியல்காலநிலை சிறப்பிதழ்
Updated on
1 min read

சூழலியல்-காலநிலை மாற்றம் என்பது சமீப காலமாக உலகளாவிய பேசுபொருளாக இருந்தாலும், தமிழகத்தில் அது இன்னும் போதிய கவனத்தைப் பெறவில்லை. இந்நிலையில், ‘கனலி’ கலை இலக்கிய இணையதளம் விரிவான ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழை’ வெளியிட்டுள்ளது. சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் பிப்ரவரி 15 அன்று இணைய இதழை வெளியிட்டார். கனலி இணையதளத்தின் வெளியீட்டாளர் க. விக்னேஷ்வரன். சிறப்பிதழ் ஆசிரியராக சு. அருண்பிரசாத் செயல்பட்டிருக்கிறார்.

நேரடி-மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், நேர்காணல், புனைவு என பல்வேறு அம்சங்களைத் தாங்கி 50-க்கும் மேற்பட்ட படைப்புகள் இந்தச் சிறப்பிதழில் அணிவகுத்துள்ளன. காலநிலை இதழியல் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

த.வி.வெங்கடேஸ்வரன், நித்யானந்த் ஜெயராமன், ராஜன் குறை, வறீதையா, நாராயணி, ஹேமபிரபா, இரா. முருகவேள், தங்க. ஜெயராமன் உள்ளிட்டோர் நேரடிக் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

ஜேம்ஸ் லவ்லாக், அமிதவ் கோஷ், ஜேன் கூடால், சுனிதா நாராயண், ராமச்சந்திர குஹா, ராபர்ட் மெக்ஃபார்லேன், ஜான் பெல்லமி பாஸ்டர், கிரெட்டா துன்பர்க் உள்ளிட்டோரின் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

சூழலியல் செயல்பாடு என்பதும் ஒரு ஃபேஷனாக மாறிவரும் நிலையில், இதுபோன்ற காத்திரமான முயற்சிகள், தமிழில் சூழலியல் சார்ந்த புரிதலை அதிகரித்து அது சார்ந்த சொல்லாடலைப் பரவலாக்கும் என்று எதிர்பார்க்கலாம். முன்னுதாரணம் அற்ற இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டி யது. முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in