Published : 12 Dec 2020 03:16 AM
Last Updated : 12 Dec 2020 03:16 AM

சேலம் பறவைகளுக்குத் தனி குறுங்கையேடு

‘தமிழகப் பறவைகள்’ என்ற தலைப்பில் 138 பறவைகள் குறித்த குறுங்கையேட்டை ‘இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை’ (NCF) 2017இல் வெளியிட்டது. தமிழகப் பறவைகளை அடையாளம் காண்பதற்கு இந்தக் கையேடு பறவை ஆர்வலர்களுக்குப் பெரிதும் உதவியது. தற்போது ‘சேலம் பறவையியல் கழகம்’ ஆதரவுடன் சேலம் மாவட்ட வனத்துறை மாவட்டப் பறவைகளுக்கான குறுங்கையேட்டை வெளியிட்டுள்ள து.

தமிழகத்தில் தென் படும் பறவைகளில் பாதிக்கு மேற்பட்டவை, அதாவது 300க்கும் மேற்பட்ட பறவையினங்கள் சேலம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட் டுள்ளன. அவற்றுள் 165 பொதுப் பறவைகளின் ஓவியங்கள், தமிழ்-ஆங்கிலப் பெயர்கள், நீளம் ஆகிய விவரங்க ளுடன் பறவைகளைக் குறித்த சிறு குறிப்பும் இந்தக் கையேட்டில் இடம்பெற்றுள்ளது. சேலம் பறவையியல் கழகத்தின் சு.வே. கணேஷ்வர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப.ஜெகநாதன் ஆகி யோர் பெயர்களையும் குறிப்புகளையும் எழுதியுள்ளனர். பறவைகளின் ஓவியங்கள், ரிச்சர்ட்கிரிம்மெட் பறவைக் கையேட்டிலிருந்து எடுத்தாளப்பட் டுள்ளன.

நீர்ப்பறவைகள், இரைகொல்லிப் பறவைகள், தரைவாழ் பறவைகள், மரம்வாழ் பறவைகள், வான்வெளிப் பறவைகள், இரவாடிப் பறவைகள் என ஆறு பிரிவுகளாகப் பறவைகள் பிரித்துத் தரப்பட்டுள்ளன. வலசை வரும் பறவைகள், மலை-காட்டுப் பகுதியில் தென்படும் பறவைகள் போன்றவையும் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன. இதுபோல் மாவட்டம்வாரியாகப் பறவைக் கையேடுகள் வெளியாகும்போது, தமிழகமெங்கும் பறவை நோக்குதலும் பறவைகள் குறித்த ஆராய்ச்சிகளும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- நேயா

மேலும் தகவலுக்கு: https://sof-life.stores.instamojo.com/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x