பேசும் படம்: தங்கத் தருணங்கள்

பேசும் படம்: தங்கத் தருணங்கள்
Updated on
1 min read

நாட்டின் பழம்பெரும் ஒளிப்படச் சங்கங்களில் ஒன்றான போட்டோகிராபிக் சொசைட்டி ஆஃப் மெட்ராஸ், சென்னை லலித் கலா அகாடெமியில் சர்வதேச டிஜிட்டல் ஒளிப்படக் கண்காட்சியைச் சமீபத்தில் நடத்தியது. இந்தக் கண்காட்சிக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் மொத்தமுள்ள 5 பிரிவுகளில் இயற்கை, மேக்ரோ, உறுப்பினர் ஆகிய பிரிவுகளில் தங்கப் பதக்கத்தைப் பெற்றவை காட்டுயிர் படங்கள். அவை இங்கே:

பெரிய காட்டு ஈ

மேக்ரோ பிரிவில் மலேசியாவின் ஆண்டி லிம் சின் குன் எடுத்த Robber Fly எனப்படும் பெரிய காட்டு ஈ படம் தங்கப் பதக்கம் வென்றது. காற்றில் பறக்கும்போதே பூச்சிகளை வேட்டையாடக்கூடியது இந்த ஈ. படத்தில் ஒரு சிறிய ஈயைப் பிடித்து உண்பதற்கு முன், கால்களால் பிடித்திருக்கிறது.

பட்டைத் தலை வாத்து

சம்யக் கனின்டே எடுத்த பட்டைத் தலை வாத்து (Bar-headed Goose) ஜோடியில் ஒன்று இறக்கையடித்துப் பறக்க யத்தனிக்கும் படம் உறுப்பினர்கள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றது. குளிர்காலத்தில் இமயமலையைத் தாண்டி தென்னிந்தியாவுக்கு வலசை வரும் பறவை இது.

மோதிக்கொள்ளும் ஃபெசன்ட் (Pheasant) பறவைகள்

பெல்ஜியத்தைச் சேர்ந்த டிரே வான் மென்சல் எடுத்த ஃபெசன்ட் பறவைகளின் மோதல் என்ற படம் இயற்கைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றது. பிரிட்டனில் அதிகமிருக்கும் பறவை வகைகளில் ஒன்று இது. இனப்பெருக்கக் காலத்தில் பெண்ணை அடைவதற்கான போட்டியில் இரண்டு ஆண் ஃபெசன்ட் பறவைகள் மோதிக்கொள்ளும்.

மேலும் அறிய: www.photomadras.org.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in