நாமே செய்யலாம்: இயற்கை பூச்சி விரட்டி

நாமே செய்யலாம்: இயற்கை பூச்சி விரட்டி
Updated on
1 min read

வீட்டுத் தோட்டத்தில் பூச்சி வந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். அதிகச் செலவில்லாமல் இயற்கை முறையில் நாமே பூச்சி விரட்டியைத் தயாரிக்கலாம்.

வீட்டில் பெரிய அளவில் காய்கறித் தோட்டம் இருப்பவர்களுக்கு இந்த முறை நன்கு உதவும்.

இயற்கை பூச்சி விரட்டியைத் தயாரிப்பதற்கு மூன்றிலிருந்து ஐந்து வகை ஆடு தின்னாத இலைதழைகள் அல்லது கிள்ளினால் பால் வரும் இலைதழைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக அத்தி, பப்பாளி, வாதமடக்கி, ஆவாரை, வரிக்குமட்டி, நுணா (மஞ்சணத்தி) ஆகிய இலைகளை எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு இலையிலும் தலா 1 கிலோ அல்லது தேவைக்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த இலைகளுடன் கோமியம் 10 லிட்டர். சாணம் ஒரு கைப்பிடி எடுத்துக்கொள்ள வேண்டும். மேற்கண்டவற்றை முதலில் சேகரித்துக்கொள்ளவும். இப்போது பூச்சி விரட்டித் தயாரிக்கும் முறையைப் பார்ப்போம்:

- இலைதழைகளை நறுக்கிக் கோமியம், சாணக் கரைசலில் 15 நாட்களுக்கு ஊற வைக்க வேண்டும்.

- ஊற வைத்த கலவையை 16-வது நாளில் வடிகட்டவும்.

- இதைப் பூச்சி, பூஞ்சைகளை விரட்டும் வகையில் பயிர்கள் மீது தெளிக்க வேண்டும்.

- இந்தப் பூச்சி விரட்டியின் அடர்த்தியான கரைசலை அப்படியே தெளிக்கக் கூடாது. ஒரு லிட்டர் பூச்சி விரட்டியை 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.

நன்றி: பினாங்கு பயனீட்டாளர் சங்க ‘இயற்கை வேளாண்மை' வழிகாட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in