

சென்னைப் புத்தகக் காட்சி 2020-ஐ ஒட்டி குறிப்பிடத்தகுந்த சூழலியல் நூல்கள் வெளியாகி உள்ளன. பிரபல சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் எழுதிய ‘உயிரைக் குடிக்கும் புட்டிநீர், ‘கண்ணுக்குத் தெரியாமல் களவுபோகும் நீர், ‘பால் அரசியல்’ ஆகிய நூல்களின் மறுபதிப்பைக் காடோடி பதிக்கம் கொண்டுவந்துள்ளது.
தமிழகப் பழங்குடிகளைப் பற்றிய விரிவான ஆய்வாக முனைவர் அ. பகத்சிங் எழுதிய ‘வாழும் மூதாதையர்கள்’ நூலை உயிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
மருத்துவர் வி. விக்ரம் குமார் எழுதிய ‘பசுமை மாறாக் காட்டுக்குள்’, சற்குணா பாக்கியராஜ் எழுதிய ‘ரீங்காரச்சிட்டுகள்: பறக்கும் ஆபரணங்கள்’ ஆகிய நூல்களைக் காக்கைக்கூடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
காந்தியப் பொருளியல் அறிஞர் ஜே.சி. குமரப்பாவின் சிந்தனைகளை விளக்கி அமரந்தா எழுதியுள்ள ‘குமரப்பாவிடம் கேட்போம்’ நூல் பரிசல் வெளியீடாக வந்துள்ளது.
- நேயா