

முன்னத்தி ஏர்
பாமயன்
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அளித்த உத்வேகத்துடன் தமிழகத்தில் இயற்கை வேளாண்மை வீரியத்துடன் பரவியது. அவருக்கு முன்பாகவும் பின்பாகவும் பலர் இதற்கு உத்வேகம் அளித்துள்ளனர். அந்த அரிய முயற்சிகளை அறிமுகப்படுத்த எழுதப்பட்டதே இந்த நூல்.
ஆசியாவின் பொறியியல் அதிசயம்
எஸ்.கோபு
பல்வேறு அணைக்கட்டுத் திட்டங்களை உருவாக்கி இருந்தாலும் கொங்கு மண்ணை செழிக்கச் செய்யும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தை ஆசியாவின் பொறியியல் அதிசயம் என்று போற்றுவார்கள். தமிழகப் பொறியாளர்களின் திறனையும் அர்ப்பணிப்பையும் விளக்கும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் குறித்து வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
தொட்டனைத்து ஊறும் அமிழ்தம்
பாமயன்
இயற்கையோடு இயைந்து இந்த வேளாண்மையை மேற்கொள்ளக்கூடிய நடைமுறைகள் தற்போது பரவலாகி வருகின்றன. இந்த முறையை நோக்கி ஆர்வத்துடன் வருபவர்களுக்கு வழிகாட்டும் முழுமையான களக் கையோடு இல்லை. அதை மனத்தில் கொண்டு இயற்கை வேளாண்மை செய்ய விழைபவர்களுக்கு உதவுவதற்காக இந்த நூல் உருவாகியிருக்கிறது. நடைமுறைக் கையேடக மட்டுமல்லாமல் ஏன் இந்த முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற பின்னணி குறித்தும் இந்த நூல் விளக்குகிறது.
தொடர்புக்கு: 7401329402