Published : 21 Dec 2019 12:25 PM
Last Updated : 21 Dec 2019 12:25 PM

விதை முதல் விளைச்சல் வரை 14: நீர் மேலாண்மையில் மாற்றுப் பயிர்த் திட்டம்

நீர் வரவு செலவுக் கணக்கு குறித்து கடந்த வாரம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாகத் தற்போது நீர்த் தேவை. ஒவ்வொரு பயிருக்கும் எவ்வாறு மாறுபடுகிறது. அந்தப் பயிர்களில் அதிக அளவு நீரைப் பயன்படுத்தி விளைவிக்கும் விளைச்சல், சந்தையில் அதிக அளவு வருமானத்தை ஈட்டித் தருகிறதா? குறைந்த செலவில் மட்டுமல்லாது குறைந்த நீர் செலவினத்தைக் கொண்டு அதிக வருவாய், பயிாிலிருந்து எடுப்பது சிறந்ததா? இறவை, மானவாாி, தோட்டக்கால் நிலங்களில் நீர் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது எவ்வாறு என்பது போன்ற கேள்விகளுக்கான பதிலைப் பார்ப்போம்.

இறவைப் பயிரான கரும்பு, வாழைப் பயிர்களுக்கு அதிக நீர் தேவை ஏற்படுகிறது. அதன் சாகுபடிக் காலமும் அதிகம். நெற்பயிரை எடுத்துக்கொண்டால் சராசாியாக 1,100 மி.மீ. முதல் 1,150 மி.மீ. நீர்த் தேவை. பயிர் சாகுபடிக் காலம் முழுவதற்கும் தேவைப்படுகிறது. அதேநேரத்தில் கரும்பு சாகுபடிக்கு அதன் சாகுபடிக் காலத்தில் சுமாா் 1,800 மி.மீ. முதல் 2,200 மி.மீ. நீர் தேவைப்படுகிறது.

நீர்ப் பற்றாக்குறையின்போது அதே நிலத்தில் நிலக்கடலைப் பயிரோ, பருத்திப் பயிரோ அல்லது மக்காச்சோளப் பயிரோ சாகுபடி செய்தால் நிலக்கடலைப் பயிருக்கு 400 முதல் 500 மி.மீ., பருத்திப் பயிருக்கு 700 மி.மீ. முதல் 800 மி.மீ., மக்காச்சோளப் பயிருக்கு 500 மி.மீ. முதல் 600 மி.மீ. நீர் போதும். சாகுபடிக் காலம் குறைந்த சிறுதானியப் பயிர்களான கம்பு, குதிரைவாலி போன்ற பயிர்களுக்கு சுமார் 350 மி.மீ. நீர் போதும். அதேபோல சாகுபடிக் காலம் குறைந்த பயறு வகைப் பயிர்களுக்கு 300 மி.மீ. முதல் 350 மி.மீ. நீர் தேவை.

எப்போது செய்யலாம்?

இறவைப் பாசனப் பகுதியில் தோட்டக்கால் பகுதியில், இந்தப் பயிர் மாற்றுத் திட்டத்துக்கு கிணற்றிலுள்ள நீாின் அளவைப் பொறுத்தும், தொடர்ந்து நிலவும் வறட்சியான சூழ்நிலையிலும் இந்த மாற்றுப் பயிர் சாகுபடியை மேற்கொள்வது நல்லது. இறவைப் பயிாில் வாய்க்கால் பாசனத்தில் (நிரந்தர பாசனப் பகுதியில் - System irrigation) இந்த மாற்றுப் பயிர்த் திட்டம் எப்போது உதவுமெனில், அணைகளில் நீர்மட்டம் குறைவாக உள்ள நிலையிலும் கடைமடைப் பகுதிகளை நீர் சாியான முறையில் வந்தடையாத சூழ்நிலையிலும், இந்த மாற்றுப் பயிர்த் திட்டம் பேரளவு உழவர்களுக்கு உதவும்.

அதேநேரத்தில் ஆற்றுப் பாசனப் பகுதிகளில் வழக்கமான நீர்த் தேவையைப் பெறும் நிலங்களில் இந்த மாற்றுப் பயிர்த் திட்டம் பொருந்தாது. மானாவாாியாக மழையை எதிா்பார்த்து, சில பகுதி நிலங்களில் நெல் நேரடி விதைப்புசெய்து, பின் மழையின் போக்குக்கு ஏற்ப நெற்பயிாில் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ளும் இடங்களில் மழை குறைவாகக் கிடைக்கும்போது அல்லது பருவகால மழை சாியாகத் தொடங்காமல் உாிய பருவத்தைக் கைவிடும் நிலையில் இந்த மாற்றுப் பயிர்த் திட்டம் சிறந்தது. வழக்கமாக சாகுபடி செய்யப்படும் நெற்பயிரை தவிா்த்து, மிகக் குறைந்த நீர்த் தேவையுடைய குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சாமை, வரகு போன்ற சிறுதானியப் பயிர்களை மாற்றுப் பயிராக விதைப்பது சிறந்தது.

மழையைப் பொறுத்து...

மானாவாாி நிலங்களில், குறிப்பாக காிசல் மண் சாகுபடியில் வழக்கமாக வடகிழக்குப் பருவமழை காலத்தில் பருவமழை உாிய காலத்தில் பெய்யும்போது உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோள விதைகளை விதைப்பதும் பருவமழை சற்றுத் தாமதமானால் கம்பு, சோளம் பயிருக்கு மாறுவதும், மழை மிகவும் கால தாமதமடைந்தால் பின்தங்கிய மழையின் காரணமாகச் சூாியகாந்திப் பயிரை டிசம்பா் மாதம் விதைப்பதும் வழக்கமாக உழவர்கள் மேற்கொள்ளும் மாற்றுப் பயிர்த் திட்டம். மாற்றுப் பயிர்த் திட்டம் என்பது பருவமழையைப் பொறுத்தும் நீர் ஆதாரங்களில் நீர் இருப்பைப் பொறுத்தும் மானாவாாி, இறவைப் பயிர்களில் தேவைக்கேற்ப மேற்கொள்ளலாம்.

மாற்றுப் பயிர்த் திட்டத்துக்கு உதவும் குறுகிய காலப் பயிர்களான பயறு வகைகளில் பாசிப்பயறு, உளுந்து போன்றவையும், சிறுதானியப் பயிர்களில் குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சாமை, தினை போன்ற பயிர்களும், எண்ணெய் வித்துப் பயிர்களில் சூாியகாந்தி, நிலக்கடலைப் பயிர்களும் நீாின் பயன்பாட்டைக் குறைத்து அதிக வருவாயை ஈட்டித் தருவதாக உள்ளன.

கட்டுரையாளர்கள்

தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com,

selipm@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x