Published : 19 Oct 2019 11:15 AM
Last Updated : 19 Oct 2019 11:15 AM

விதை முதல் விளைச்சல் வரை 05: முக்கியத்துவம் மிக்க விதைகள்

சொ.பழனிவேலாயுதம், பூச்சி செல்வம்

விவசாயத்தில் விதையின் முக்கியத்துவம் நாம் நன்கு அறிந்ததே. நல்ல தரமான விதையைப் பயன்படுத்துவதால் 25 சதவீதம் மகசூல் அதிகாிப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தொிவிக்கின்றன. பயிருக்குப் பயிா் அதன் வடிவிலும் முளைக்கும் தன்மையிலும் முளைப்பதற்கு எடுக்கும் காலத்திலும் விதைகள் வித்தியாசப்படுகின்றன.

விதைகளை உழவர்கள் தேர்ந்தெடுக்கும்போதும் (அல்லது) முந்தைய பருவத்தில் விளைச்சலில் எடுத்த விதைகளைப் பயன்படுத்தும்போதும் அவ்விதைகளின் முளைப்புத் திறனை அறிந்து பயிர் சாகுபடி செய்தால் அதிக பலனைத் தரும். சராசாியாக எந்த ஒரு விதையும் விதைக்காக அறுவடை செய்து ஒன்பது மாதங்கள் வரை முளைப்பின் வீாியம் குறைவுபடாது.

சில எண்ணெய் வித்துப் பயிர்களான நிலக்கடலை, எள் போன்ற பயிர்களில் முளைப்புத்திறன் ஆறு மாதத்துக்குப் பிந்தைய நாட்களில் குறைய வாய்ப்புண்டு. தற்போதைய நிலையில் உழவர்கள் தாம் சாகுபடி செய்த பயிரிலிருந்து விதைகள் சேகாித்துப் பின் பயன்படுத்தும் விதையின் அளவு மொத்த விதைத் தேவையில் 30 முதல் 45 சதவீதம் விதைகளை விதை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிலிருந்து விலைக்கு வாங்கி விதைப்புக்குப் பயன்படுத்தி வருவது 55 சதவீதம்.

அவ்வாறு விதைகளை விலைக்கு வாங்கி பயிர் சாகுபடிக்காகப் பயன்படுத்தும்போது விவசாயிகள், குறிப்பிட்ட ரகம், முந்தைய நாட்களில் எவ்வாறு மகசூல் அளித்தது, அப்பயிாின் அக்குறிப்பிட்ட ரக விதைகள் அப்பகுதிக்கு ஏற்றதா என்பன போன்ற விவரங்களை அறிந்து விதையைத் தேர்ந்தெடுப்பது நல்ல பலன் கொடுக்கும். விதைகளில் சாதாரண ரக விதைகள், மேம்படுத்தப்பட்ட ரக விதைகள், ஒட்டு விதைகள் ஆகியவை பயன்பாட்டில் உள்ளன.

விவசாயிகள் விதைகளின் வகை பற்றித் தொிந்துகொள்வது அவசியம். இவ்விதைகள் வேளாண் பல்கலைக்கழகம் குறிப்பிட்ட ரகத்தில் தோ்ந்தெடுத்து வளமான பயிாில் உாிய முறைப்படி சிறிதளவு உற்பத்தி செய்யப்பட்டு அரசுப் பண்ணைகளில் விதைப்பெருக்கம் செய்யப்படும் விதைகளாகும். இவ்விதையின் இயற்பியல் சுத்தத்தன்மை, இனச்சுத்தம் 99 சதவீதத்துக்கு மேலே இருக்கும். இவ்விதைகள் பின் வரும் காலத்தில் இக்குறிப்பிட்ட ரகத்தில் பேரளவு உற்பத்தி செய்து விநியோகிக்க வழி வகுக்கிறது.

1) ஆதார நிலை விதைகள் இவ்விதைகள் மூல விதைகளிலிருந்து சாகுபடி செய்யப்பட்டு பெறப்படும் விதைகளாகும். இவ்விதைகளில் இனச்சுத்தம் 99 சதவீதம் இருக்கும். இவ்விதைகள் விற்பனை நிலையங்களிலும், அரசு வேளாண்மை விாிவாக்க மையங்களிலும் விதைப் பெருக்கத்துக்காகப் பயன்படுகிறது. இவ்விதைகளுக்கு உற்பத்தியாளா், சாகுபடியாளருக்கு இடையில் மூன்றாம் நபர் (அ) நிறுவனம் தரச்சான்று செய்து விற்பனைக்கு வரும்.

2) சான்று பெற்ற விதைகள் இவ்விதைகளே உழவா்கள் பயன்பாட்டுக்குப் பேரளவு வரும். இவ்விதைகள் ரக விதைகளில் மூன்றாம் நபர் சான்றளிப்பு செய்து விற்பனைக்கு வருகிறது. மேலே குறிப்பிட்ட ஆதார நிலை விதைகளிலிருந்து பெறப்படும் விதைகளாகும்.

இவ்விதைகளில் இனச்சுத்தம் குறைந்தபட்சம் 98 சதவீதம் வரையிலும் முளைப்புத்திறன் அக்குறிப்பிட்ட பயிருக்கு அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச முளைப்புத்திறனுடன் இருக்கும். இக்குறிப்பிட்ட சான்று விதைகள் விற்பனைக்கு வரும்போது சான்றளிப்பு முகமையால் நீல நிற அட்டைகள் பொருத்தி விதை விற்பனைக் கடைகளில் விற்பனைக்கு வரும்.

இச்சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் வாங்கி பயன்படுத்தும் பட்சத்தில் அந்த ரகத்தின் இனத்துாய்மை, முளைப்புத்திறன் எவ்விதத்திலும் குறைவு படாது. சீரான மகசூல் கிடைக்க, சான்றளிப்பு முகமை உறுதி செய்கிறது.
இவ்வாறு மேற்கூறிய மூன்றாம் நபர் சான்றளிப்பு செய்யாமல், தற்சான்றளிப்பு செய்தும் விற்பனைக்கு வரும். இவ்விதைகள் விற்பனைக்கு வரும்போது அதன் பைகளில் பச்சை நிற அட்டைகள் தற்சான்றளிப்பு செய்து விற்பனைக்கு வரும்.

விவசாயிகள் இவ்விதைகளை வாங்கும்போது உற்பத்தியாளாின் பேரில் உள்ள நம்பிக்கை, கடந்த காலங்களில் இவ்விதை உற்பத்தியாளரால் உற்பத்தி செய்யப்பட்டு பெற்ற விதைகளின் முளைப்புத்திறன், இனத்துாய்மை ஆகியவற்றை அறிந்து விதைகளை வாங்கி விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.

விதைகளைப் பயன்படுத்தும்போது

1) முந்தைய சாகுபடியில் பெறப்பட்ட ரக விதைகளை சுயமாகப் பயன்படுத்தும்போது, விதை அறுவடை நாளிலிருந்து ஒன்பது மாதங்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும். அவ்விதைகளில் பூச்சி, பூஞ்சாணங்கள் தாக்காதவாறு நல்ல வெயில் அடிக்கும் நாட்களில் நிழலில் உலா்த்திப் சேகாித்துவைத்துக் கொள்ள வேண்டும். எ.கா. நெல், உளுந்து.

2) வீாிய ஒட்டு விதைகளைப் பயன்படுத்தி விளைவிக்கும் பயிாிலிருந்து அடுத்த பருவத்துக்கு விதைகளைச் சேகாித்துப் பயன்படுத்தக் கூடாது. (மக்காச்சோளம், சோளம், கம்பு , பருத்தி போன்ற பயிா்களில் வீாிய ஒட்டுரக விதைகளையே விவசாயிகள் அதிக அளவு வாங்கிப் பயன்படுத்துகின்றனர்)

3) தானியங்களைக் கொள்முதல் செய்து உணவுக்காக, கால்நடைத் தீவனத்துக்காக விற்பனையை மேற்கொள்ளும் நிறுவனங்களிலிருந்து விதைகள் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அங்கிருந்து பெறப்படும் விதைகளின் முளைப்புத்திறனில், இனச்சுத்தத்தில் குறைவு ஏற்படும் சாத்தியம் அதிகம். பயிர் விளைச்சல் குறையும்.

4) விதைத் தேவைக்குத் தனியார், அரசு விதை விற்பனை நிலையங்களில் விதை வாங்கும்போது சான்றளிப்பு செய்த விதைகளையே கூடியவரை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். காலாவதி நாள் அறிந்து அதற்கு முன்னா் விதையைப் பயன்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர்கள்
தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com,
selipm@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x