சம்பா பருவ சாகுபடி குறைவு

சம்பா பருவ சாகுபடி குறைவு
Updated on
1 min read

சம்பா பருவ சாகுபடி குறைவு

இந்தியப் பயிர் சாகுபடிக்கு சம்பா, குறுவை என இரண்டு பருவங்கள் உள்ளன. சம்பா பருவம் என்பது ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரையிலானது. இந்தப் பருவ சாகுபடி தென்மேற்கு பருவமழையை நம்பியுள்ளது. அதேபோல், குறுவைப் பருவ சாகுபடி வடகிழக்குப் பருவ மழையைச் சார்ந்துள்ளது. இந்நிலையில், செப்டம்பர்13 நிலவரப்படி 1,046 லட்சம் ஹெக்டேரில் சம்பா பருவ சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே நாளுடன் ஒப்பிடும்போது 0.47 சதவீதம் குறைந்துள்ளது.

தாவர எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு

கடந்த பருவத்தில் (2017-18) 1.50 கோடி டன் தாவர எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில் சமையல் எண்ணெயின் பங்கு 70 சதவீதமாக உள்ளது. அதில் சமையலுக்குப் பயன்படுத்தும் பாமாயிலின் பங்கு ஏறக்குறைய 60 சதவீதம். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தாவர எண்ணெய் இறக்குமதி 15.87 லட்சம் டன்னாக இருந்தது. அதேபோல் கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 15.12 லட்சம் டன்னாக இருந்தது. இதன் மூலம் இறக்குமதி 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

அறுபது வயதுக்கு மேல் ஓய்வூதியம்

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி ‘பிரதம மந்திரி கிசான் பென்சன் யோஜனா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தின் மூலம் அறுபது வயதுக்கு மேல் இருக்கும் சிறு, குறு உழவர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
தொகுப்பு: சிவா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in