கொடைக்கானல் பூண்டுக்கு அங்கீகாரம்

கொடைக்கானல் பூண்டுக்கு அங்கீகாரம்
Updated on
1 min read

கொடைக்கானல் பூண்டுக்கு அங்கீகாரம்

உணவுப் பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல் சர்வரோக நிவாரணியாகத் திகழ்ந்து வரும் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இருமுறை மட்டுமே விளையும் இந்த மலைப்பூண்டு 11 முதல் 20 டிகிரி செல்சியஸ் வரையிலான குளிரையும் தாங்கி விளையும். தனித்தன்மை வாய்ந்த இந்தப் பூண்டுக்கு புவிசார் குறியீடு அளிக்கக் கோரி 2018-ல் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த மலைப்பூண்டுடன் புவிசார் குறியீட்டு பட்டியலில் தேசிய அளவில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.

அதிக விலை அரியவகைத் தேயிலை

தேயிலைககளில் மிகவும் அரிய வகையாகச் சொல்லப்படும் ‘மனோஹரி கோல்ட் தேயிலை’ இந்த ஆண்டு ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த ஏலம் சமீபத்தில் குவஹாத்தி தேயிலை ஏல மையத்தில் நடந்தது. இந்த அரியவகைத் தேயிலை, அசாமில் விளைகிறது. கடந்த ஆண்டு 
ரூ.39 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த முறை ரூ.50 ஆயிரத்தைத் 
தொட்டது. பொது ஏலத்தில் ஒரு கிலோ ரூ.50 ஆயிரத்துக்கு விலை போவது இதுவே முதல் முறை.

பருத்தியைத் தாக்கும் இளஞ்சிவப்பு காய்ப்புழு

மகாராஷ்டிரம் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட செய்த ஆய்வில், பருத்தியை இளஞ்சிவப்புக் காய்ப்புழு தாக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சமீபத்தில் இந்தக் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அலோகா மாவட்டத்தில் 8 முதல் 10 வயல்களிலும் துலே மாவட்டத்தில் 16 வயல்களிலும் இந்தத் தாக்குதல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தொகுப்பு: சிவா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in