

பாரம்பரிய நெல் ரகங்களில் ஊடுபயிருக்கான சிறந்த ரகம் காட்டுப் பொன்னி. 140 நாள் வயதுடையது. நெல்லும் அரிசியும் சிவப்பு நிறத்தில் இருக்கும், மோட்டா ரகம். அதிகச் செலவில்லாமல் எளிய முறையில் சாகுபடி செய்ய ஏற்றது.
மானாவாரி மற்றும் மேட்டுப் பகுதிகளில் தோப்பாக உள்ள தென்னை, வாழை, சப்போட்டா சாகுபடி நிலங்களில் ஊடுபயிராகக் காட்டுப் பொன்னியைப் பயிரிடலாம். ஒரு மாதம்வரை தண்ணீர் தேவையின்றி வறட்சியைத் தாங்கும்.
இடுபொருள், பூச்சி தாக்குதல், களை தொந்தரவு போன்றவை இல்லை. ஏக்கருக்கு 20 மூட்டைவரை மகசூல் கிடைக்கும்.
அறுவடைக்குப் பின் இதன் வைக்கோலை நிலத்தில் மூடாக்காகப் பயன்படுத்தலாம். இதன் மூலம் மண் வளம் கூடும், நுண்ணுயிர் வளம் பெருகும், மண்புழு எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் சாகுபடிச் செலவு குறையும்.
இந்த நெல்லின் அரிசியில் நார்ச் சத்து, புரதச் சத்து, கால்சியம் அதிகம் உள்ளன. எனவே, இதை உண்பதன் மூலம் பல்வேறு நோய்கள் குணமாகும்.
கால்நடைகளுக்கு வைக்கோலைத் தீவனமாகக் கொடுப்பதன் மூலம் அவற்றின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
- நெல் ஜெயராமனைத் தொடர்புகொள்ள: 94433 20954