சுவையில் கொள்ளைகொண்ட கிச்சலி

சுவையில் கொள்ளைகொண்ட கிச்சலி
Updated on
1 min read

பொதுவாக வெள்ளை அரிசியையும் சன்ன ரகமாகவும் சாப்பிட நாம் பழகிவிட்டோம். சத்து மிகுந்த மோட்டா ரக அரிசியைத் தவிர்த்துவிட்டுப் பாலிஷ் செய்யப்பட்ட, எந்தச் சத்துமில்லாத உணவு வகைகளை நாம் உட்கொண்டு வருகிறோம். இது நம்முடைய ஆரோக்கியத்துக்குப் பலனளிக்காது.

அதேநேரம் வெள்ளை அரிசியாகவும், சன்ன ரகமாகவும் சாப்பிடச் சுவையாகவும் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுகிற ரகமாகக் கிச்சலி சம்பா உள்ளது.

கிச்சலி சம்பா நெல் ரகம் மலையும் மலை சார்ந்த குறிஞ்சிப் பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. சன்ன ரகம், மஞ்சள் நெல், வெள்ளை அரிசி, நூற்று முப்பத்து ஐந்து நாளில் அறுவடைக்கு வரக்கூடியது. நாலரை அடி வரை வளரும் தன்மை கொண்டது. சாயும் தன்மை கொண்டதாக இருந்தாலும் அறுவடைக்கும், நெல்லுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. மழை வெள்ளத்திலும் ஓரளவு தாக்குப்பிடிக்கும்.

கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதைச் சாப்பிட்டால் தேகச் செழுமையும் உடல் பலமும் உண்டாகும். இந்த வைக்கோலைச் சாப்பிடும் கால்நடைகளின் நோய் எதிர்ப்புத் திறனும் அதிகரிக்கும். பால் சுரக்கும் திறன் அதிகரிக்கும்.

அதுமட்டுமில்லாமல், அனைத்து வகையான பலகாரங்கள் செய்வதற்கும் ஏற்ற அரிசி ரகம் இது. சமீபகாலமாகத் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உணவளிக்க, இந்தக் கிச்சலி சம்பா அரிசியைப் பயன்படுத்துகிறார்கள்.

பொதுவாக மருத்துவர்கள், நோயாளிகளிடம் அரிசி சோற்றை அதிகம் உண்ணாதீர்கள். காய்கறிகளை அதிகம் உண்ணுங்கள் என்கிறார்கள். அதில் அரிசியிலும் குட்டை ரகப் பயிர்கள், ஒட்டு ரகப் பயிர்கள், `பாலீஷ்’ என்ற பெயரில் சத்து நீக்கப்பட்ட அரிசி வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

நெல் ஜெயராமன் தொடர்புக்கு: 9443320954

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in