

இந்தியாவில் காலங்காலமாகப் பயிர் செய்யப்பட்டு வரும் பாரம்பரிய நெல் வகைகள் பலவும் மருத்துவக் குணம் மிகுந்தவை. அவற்றிலும் மாப்பிள்ளை சம்பா தனித்தன்மை மிக்கது.
இந்தியாவில் அதற்குக் காரணம், மாப்பிள்ளை சம்பாவின் நோய் எதிர்ப்பு சக்தி. இதன் அரிசியை வேகவைக்கும்போது வடிக்கும் கஞ்சியில் மிளகு, சீரகம், உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் கிடைக்கும் ருசியே தனிதான். ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் வழங்கப்படும் சூப் வகைகளிலும்கூட இந்தச் சுவை கிடைக்காது என்று சொல்லலாம். கஞ்சியே இவ்வளவு ருசி என்றால், சோறு எவ்வளவு சுவையாக இருக்கும்?
நீரிழிவு மருந்து
ருசி என்றில்லை, உடலுக்கு வலுவைத் தரக்கூடிய ஏராளமான சத்துகளும் மாப்பிள்ளைச் சம்பாவில் உண்டு. இதற்கெல்லாம் மேலாக நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய, பல மருத்துவக் குணங்கள் இந்த அரிசியில் உள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு இது உணவு மருந்து. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்வதற்கு ஏற்ற நெல் ரகம் இது.
வயது 160 நாட்கள். நேரடி விதைப்பு செய்தால் 150 நாளில் அறுவடைக்குத் தயாராகிவிடும். நிலத்தில் தண்ணீரே இல்லாமல், ஒரு மாதக் காலத்துக்கு நிலம் காய்ந்தாலும்கூட மாப்பிள்ளை சம்பா பயிர் வாடாது. சீற்றம் தாங்கும் அதேபோல கனமழைக் காலங்களில் நெற்பயிர் பல நாட்கள் நீரில் மூழ்கிக் கிடந்தாலும்கூட மாப்பிள்ளை சம்பா பயிர் அழுகாது.
இப்படி இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய இந்த நெல் ரகம், பூச்சி தாக்குதல்களாலும் எளிதில் பாதிக்கப்படாது. ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்வதே இந்த நெல் ரகத்துக்கு ஏற்றது. சந்தையிலும் இந்த நெல் ரகத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நெல் ஜெயராமனைத் தொடர்புகொள்ள: 94433 20954