

விவசாயிகளால் யானைகள் இறக்க நேரிடுவதற்கான காரணங்கள்:
1. பொதுவாகக் காட்டுப்பன்றி, யானை போன்றவற்றை விரட்டுவதற்காகத் தர்ப்பூசணி, பலா போன்ற பெரிய பழங்களில் நாட்டு வெடி மறைத்து வைக்கப்படுகிறது. இதற்குப் பெயர் ‘அவுட்டு காய்'. உயிரினம் அதைக் கடிக்கும்போது, வெடித்து உயிரைப் பறித்துவிடும்.
2. சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்து உயிரினங்கள் சுடப்படுகின்றன. கல்குவாரிகளைத் தகர்க்கப் பயன்படும் சல்பர் டைஆக்சைடு அல்லது துப்பாக்கி மருந்து எளிதாகக் கிடைப்பதால், அந்த மருந்தையும் துருப்பிடித்த இரும்புத் துண்டு போன்றவற்றைத் துப்பாக்கிக் குழலில் அடைத்துச் சுட்டுவிடுகிறார்கள். இதன் மூலம் உயிரினம் உடனடியாக இறந்து போகாவிட்டாலும், செப்டிக் (அழுகல்) ஏற்பட்டு உயிரினம் மடியக்கூடும்.
3. முள்வேலியிட்டுக் குறைந்த அழுத்த மின்சாரத்துக்குப் பதிலாக, அதிக அழுத்த நேரடி மின்சாரத்தைக் கொடுப்பதால் யானைகள் இறக்கின்றன.