

சீனாவின் தெற்கு யுன்னான் பகுதியில் உள்ள ஹோங்கே ஹானி நெல் மலைச்சரிவுப் பகுதியை வெறும் வயல்பரப்பு என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். கடந்த 1,300 ஆண்டுகளில் ஹானி மக்கள், மிகவும் சிக்கலான ஒரு பாசன நடைமுறையை உருவாக்கி இருக்கிறார்கள். காடுகளைக் கொண்ட மலைச்சரிவில் இருந்து இறங்கி வரும் தண்ணீர் வாய்க்கால்கள், ஆழமற்ற வயல்வெளிகள் வழியாக ஓடி, கடைசியாக ஹாங் நதியில் கலக்கிறது. ஆயிரம் கைகள் இணைந்து காலங்காலமாக உருவாக்கப்பட்ட இந்த நடைமுறை இன்றைக்கும் அப்பகுதியின் முதன்மைப் பயிரான சிவப்பரிசி விளைச்சலுக்கு ஆதாரமாகத் திகழ்கிறதாம்.