

தமிழகத்தில் முதன்முறையாகப் பசுமை இல்ல வாயுக்களை அளக்கும் கருவி, கும்பகோணத்தில் உள்ள ஆடுதுறையில் நிறுவப்பட இருப்பதாக மத்திய அரசு அமைப்பான 'மானாவாரி விவசாயத்துக்கான மத்திய ஆராய்ச்சி மையம்' (க்ரிடா) தெரிவித்துள்ளது.
அடிப்படையில் இந்திய நாடு வேளாண்மையைச் சார்ந்துள் ளது. பயிர் விளைச்சலுக்குப் பல்வேறு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றிலிருந்து பசுமை இல்ல வாயுக்கள் என்று கருதப்படும் நைட்ரஸ் ஆக்ஸைட், மீதேன் மற்றும் கரியமில வாயு போன்றவை மிக அதிக அளவில் வெளியேற்றப்படுகின்றன. இவற்றை அளப்பதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் கருவி ஒன்றை நிறுவி வருகிறது 'க்ரிடா'. இந்த பசுமை இல்ல வாயு அளக்கும் கருவி முதன்முறையாக தமிழகத்தில் ஆடுதுறையில் இன்னும் சில மாதங்களில் நிறுவப்பட இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் இயக்குனர் வெங்கடேஸ்வரலு 'தி இந்து' நிருபரிடம் கூறியதாவது:
"பசுமை இல்ல வாயுக்கள் பூமியின் மேல் பாதுகாப்பு கவசம் போல அமைந்துள்ள ஓசோன் வாயுப் படலத்தை சேதப்படுத்துகின்றன.அந்த சேதத்தை குறைக்க ஒவ்வொரு நாடும் தான் வெளியேற்றும் பசுமை இல்ல வாயுக்களை அளப்பதற்கு கருவி ஒன்றை நிறுவி இருக்கிறது. இந்தக் கருவியில் பதிவாகும் பசுமை இல்ல வாயுக்களின் அளவை 'பருவநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பிடம்' நான்கு வருடங்களுக்கு ஒரு முறை சமர்ப் பிக்க வேண்டும்.
தமிழகத்தில் நிறுவப்படும் இந்தக் கருவி கிழக்குக் கடற்கரையின் தென்பகுதிகளில் வெளியாகும் பசுமை இல்ல வாயுக்களை அளக்கும். இதன் மூலம் வயல்களில் சரியான அளவில் உரங்கள் பயன்படுத்தப்படு கின்றனவா என்பதையும் அறிய முடியும். இந்தக் கருவி ஏற்கனவே டில்லி, ஒடிஷா, அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் நிறுவப்பட்டுள்ளது" என்றார்.