தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 35: கொஞ்சம் உணவு நிறைய உரம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 35: கொஞ்சம் உணவு நிறைய உரம்
Updated on
1 min read

ஒவ்வொரு உயிரினத்துக்கும் தனது வாழ்நாளில் வளர்ச்சிப் பருவம், முதுமைப் பருவம் என்ற நிலைமை உண்டு. குறிப்பாகச் சில கெண்டை வகை மீன்கள் 50 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன, Cyprinus carpio என்ற கெண்டை 200 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அவை முழு வளர்ச்சி அடைய ஓராண்டு மட்டும் போதும். அதற்குப் பின் அதன் எடையில் பெரிய மாற்றம் இருக்காது. இப்போது வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளில் 45 நாட்களுக்கு மேல் வளர்ச்சி என்பது பெரிதாக இருக்காது. எனவே, வளர்ச்சிப் பருவம் என்பது குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இருக்கும்.

வளர்ச்சிப் பருவமும் பராமரிப்பும்

நூறாண்டு வாழும் மீன் ஆண்டுக்கு 10 கிலோ வீதம் உண்டால் 100 ஆண்டுகளுக்கு 1,000 கிலோ பூச்சிகளும் புழுக்களும் அல்லவா வேண்டும். ஆனால், அவை தனது உடல் எடையான 10 கிலோவை மட்டும் வைத்துக்கொண்டு 990 கிலோவை உரமாகவே தருகின்றன. எனவே, பண்ணையில் வளர்ச்சிப் பருவத்தில் உள்ளபோதே பயிர்களையும் கால்நடைகளையும் வளர்த்துப் பயன்பெற வேண்டும். உயிர்கள் தமது வளர்ச்சிப் பருவம் முடிந்தவுடன் உடல் பராமரிப்புக்கு மட்டுமே உணவை எடுத்துக்கொள்கின்றன.

இவ்வாறு எடுத்துக்கொள்ளப்படும் உணவு பெரும்பாலும் மரக்கறி உணவாக இருப்பதில்லை. அப்படி மரக்கறி உணவை எடுத்துக்கொள்வதில், பெருமைப்படுவதில் ஒன்றுமில்லை. ஏனெனில், நாம் யாரும் மரக்கறி உணவை மட்டுமே எடுத்துக்கொள்வதில்லை. மிகச் சிறந்த மரக்கறி உண்ணியாகக் கருதப்படும் மாடு உண்ணும்போது ஏராளமான பூச்சிகளையும் சேர்த்தே உண்கிறது. மரக்கறி மட்டுமே உண்பவர்கள்கூட ஏராளமான பாக்டீரியாவை உண்கின்றனர் என்பதை மறந்துவிடக் கூடாது.

(அடுத்த வாரம்: மரக்கறி மட்டுமா உண்கிறோம்?)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in