வயலில் எலிகளைக் கட்டுப்படுத்த...

வயலில் எலிகளைக் கட்டுப்படுத்த...
Updated on
1 min read

வயலில் எலித்தொல்லையைக் கட்டுப்படுத்தக் கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றலாம்:

# வரப்புகளின் உயரத்தையும் அகலத்தையும் குறைக்க வேண்டும்.

# வயல்களில் களைச் செடிகளையும் புற்களையும் அகற்ற வேண்டும்.

# வயல்களில் வளைகளை வெட்டி எலிகளைப் பிடித்து அழிக்கலாம்.

# கிட்டி வைத்து எலிகளைப் பிடித்து அழிக்கலாம்.

# எலி பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டவர்களை அழைத்து, எலிகளைப் பிடித்து அழிக்கலாம்.

# நாய்களையும் பூனைகளையும் எலி பிடிக்கப் பயன்படுத்தலாம்.

# ஆந்தை மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் எலி பிடிக்க வசதி அளிக்கும் வகையில், வயல்களில் ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் மட்டை குச்சிகளை ‘T’ வடிவில் ஊன்றி வைக்க வேண்டும். இந்தக் குச்சிகள் ஆறு அடி உயரம் உள்ளவையாக இருக்க வேண்டும்.

இந்த முறைகள் பலனளிக்காத நிலையில் மட்டும் கீழ்க்கண்ட முறைகளைப் பயன்படுத்தலாம்:

# எலிவளைகளில் ஐந்து கிராம் அலுமினியம் பாஸ்பைடு மாத்திரைகள் வளைக்கு இரண்டு வீதம் இட்டு எலிகளை அழிக்கலாம்.

# ஒரு வளைக்கு ஒரு கட்டி என்ற அளவில் புரோ மோடையடோன் கட்டிகளை வளைக்கு அருகில் வைத்து எலிகளை அழிக்கலாம்.

#

ஒரு பங்கு ஸிங்க் பாஸ்பைடு, 49 பங்கு எண்ணெயில் வறுத்த பொரியில் கலந்து வைக்கலாம்.

# 10 சதவீதம் போரேட் குருணை இரண்டரை கிராம் மருந்தை 10 லிட்டர் நீரில் கலந்து வளைகளில் ஊற்றலாம்.

- கட்டுரையாளர், முன்னாள் உதவி வேளாண் அலுவலர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in