பசுமை நூல்: இந்தியச் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு ஒரு வழிகாட்டி

பசுமை நூல்: இந்தியச் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு ஒரு வழிகாட்டி
Updated on
1 min read

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றி தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆர்வமாக இருக்கிறது அல்லது சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றித் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இதோ உங்களுக்குத் தெளிவை ஏற்படுத்த ஒரு கையேடு வந்திருக்கிறது.

சுற்றுச்சூழல் - வளர்ச்சி சார்ந்த பிரச்சினைகள் உள்ளூர் அளவிலும் சர்வதேச அளவிலும் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆண்டின் முக்கியச் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய விரிவான, ஆழமான அலசல்களை முன்வைக்கும் ‘State of India’s environment 2014 A Down To Earth annual' என்ற ஆண்டு மலரைச் சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட் வெளியிட்டுள்ளது. டவுன் டு எர்த், தெற்காசிய அளவில் வெளியாகிக் கொண்டிருக்கும் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் இதழ்.

தண்ணீர், கனிமச் சுரங்கங்கள், விவசாயம், காடுகள், பருவநிலை மாற்றம், ஆற்றல், நச்சுகள், மாசுகள், தொழிற்சாலைகள், ஆரோக்கியம், உணவு உள்ளிட்ட பிரிவுகளில் விரிவான அலசல்கள் இந்த மலரில் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டில் நிகழ்ந்த முக்கியச் சுற்றுச்சூழல், வளர்ச்சி சார்ந்த நிகழ்ச்சிகள், சம்பவங்கள், நபர்கள், நடைமுறைகள், கொள்கைகள், ஆராய்ச்சி சார்ந்த கட்டுரைகள், கருத்துகள் இதில் இடம்பெற்றுள்ளன.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் எழுத்தாளர்கள், கருத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் கையில் அவசியம் இருக்க வேண்டிய மலர் இது.

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எவ்வளவு முக்கியமானவை, அவை நம் உடல்நலனை எப்படிப் பாதிக்கின்றன, அவற்றிலிருந்து எப்படி மீள்வது என்ற கேள்விகள் உங்களுக்கு இருந்தால், அந்தப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள இந்த நூல் கைகொடுக்கும்.

தொடர்புக்கு: www.cseindia.org, rchandran@cseindia.org / 9810641996.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in