பருவநிலை மாற்றப் பேச்சுவார்த்தை

பருவநிலை மாற்றப் பேச்சுவார்த்தை
Updated on
1 min read

பிலிப்பைன்ஸில் மோசமான புயல் தாக்கியுள்ள நிலையில், 2015ஆம் ஆண்டில் இறுதி செய்யப்பட வேண்டிய பருவநிலை மாற்ற உடன்பாடு பற்றிய சர்வதேசப் பேச்சுவார்த்தை, ஐ.நா. சபை ஏற்பாட்டில் வார்சாவில் நவம்பர் 11ந் தேதி தொடங்கியது. கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பசுங்குடில் வாயு வெளியீட்டை குறைப்பது பற்றிய இப்பேச்சுவார்த்தை 12 நாள்கள் நடைபெறும். "இந்த முறை இணக்கமான தீர்வு காணப்பட வேண்டும். இதில் எடுக்கப்படும் முடிவைப் பொறுத்தே நமது எதிர்காலம் இருக்கிறது" என்று ஐ.நா. பருவநிலை மாற்ற அமைப்பின் தலைவர் கிறிஸ்டினா ஃபிகரெஸ் தெரிவித்தார்.

பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களை எரிப்பதால் உருவாகும் பசுங்குடில் வாயுக்கள், கடுமையான தட்பவெப்பநிலை மாற்றங்களை உருவாக்குவதில் பங்காற்றுகின்றன. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு 400 பி.பி.எம். (கன அளவில் 10 லட்சத்தில் ஒரு பங்கு) ஏற்கெனவே எட்டப்பட்டுவிட்டது. இது உலகில் பல்வேறு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதர்கள் இயற்கைக்கு இணக்கமான வாழ்க்கை முறையை மேற்கொண்டால் மட்டுமே, இந்த வாயுக்களின் வெளியீட்டை கட்டுப்படுத்த முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in