பேசும் படம் - இது மைனா அல்ல!

பேசும் படம் - இது மைனா அல்ல!
Updated on
1 min read

தென்னிந்தியாவில் ஏழு வகை மைனாக்கள் காணப்படுகின்றன. படத்தில் இருப்பது மைனா அல்ல. அதன் உறவினர் சோளக்குருவி (Rosy Starling).

சட்டென்று பார்க்கும்போது மைனாவைப் போலிருந்தாலும், இதன் உடல் ரோஸ் நிறத்தில் இருக்கும்; மைனாவுக்குப் பழுப்பு நிறம்.

அத்துடன் மைனாவின் கண்களைச் சுற்றியிருக்கும் மஞ்சள் தீற்று, சோளக்குருவிக்கு இருக்காது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வலசை வரும் பறவை இது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in