

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகக் காடுகளில் மொத்தமிருந்த வேங்கைப் புலிகளின் எண்ணிக்கை 1,00,000. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகக் காடுகளில் மொத்தமிருந்த வேங்கைப் புலிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 97 சதவீதம் அழிக்கப்பட்டு, வெறும் 3,500 ஆகச் சுருங்கிவிட்டது. காடுகளையும் புலிகளையும் மனிதர்கள் அழித்ததே இதற்கு முதன்மைக் காரணம்.
இந்தியாவில் வாழும் ஆசிய யானைகள், அழகு மிகுந்த தந்தத்துக்காகச் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவதாக நினைக்கிறோம். இது 100 சதவீதம் உண்மை. தந்தத்துக்காக மட்டுமில்லாமல், தோலுக்காகவும் இவை கொல்லப்படுவதுதான் பேரவலம். அதேபோல 2010-2012-க்கு இடைப்பட்ட இரண்டே ஆண்டுகளில் கொல்லப்பட்ட ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை 1,00,000.